என்ன இந்தியாவிற்கு செமி பைனல் செல்வதில் சிக்கலா? காத்திருக்கும் ஆபத்து.. கோலி சுதாரிக்க வேண்டும்!
துபாய்: பாகிஸ்தானிடம் உலகக் கோப்பை டி 20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது இந்திய அணியின் செமி பைனல் வாய்ப்பை கொஞ்சம் சிக்கலாக்கி உள்ளது.
Recommended Video
உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்தியா தனது முதல் குழு ஆட்டத்திலேயே தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை டி 20 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானிடம் இந்தியா வீழ்ந்து உள்ளதால் உலகக் கோப்பை டி 20 செமி பைனலுக்கு இந்தியா தேர்வாக முடியாமல் போய்விடுமோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

உண்மை என்ன?
ஆனால் இந்தியா இன்னும் செமி பைனல் வாய்ப்பை இழக்கவில்லை. இந்தியா 3 முக்கியமான போட்டிகளில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியா செமி பைனல் செல்வதற்கான வாய்ப்புகளை பார்க்கலாம்.

எப்படி நடக்கிறது?
இந்த டி 20 உலகக் கோப்பை போட்டி ஒரு குழுவிற்கு 6 அணிகள் என்று 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆடப்படுகிறது.
குழு ஏ : இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம்
குழு பி: இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

எப்படி தேர்வு
இந்த இரண்டு குழுக்களுக்கும் நடக்கும் ஆட்டங்களில் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி செமி பைனல் செல்லும். குழு ஏவில் முதல் இடம் பிடிக்கும் அணி செமி பைனலில் குழு பி யில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியோடு மோதும். அதேபோல் குழு ஏவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி செமி பைனலில் குழு பி யில் முதல் இடம் பிடிக்கும் அணியோடு மோதும். இதனால் குழு ஆட்டங்களில் முதல் 2 இடங்களுக்குள் ஒரு அணி வர வேண்டும்.

கட்டாய ஆட்டம்
முதல் இரண்டு இடங்களுக்குள் வர வேண்டும் என்றால் ஒரு குழுவில் இருக்கும் அணி குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் குழுவில் ஆடும். இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளிடம் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா தகுதிபெற வாய்ப்பு 1
வாய்ப்பு 1 - ஒருவேளை குழு ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்தால், இந்தியாவும் நியூசிலாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதாவது நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்து, அதன்பின் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தி மற்ற அணிகளையும் நியூசிலாந்து வீழ்த்தினால் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடம் பிடிக்கும். பாகிஸ்தான் மற்ற கத்துக்குட்டி அணிகளை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி இரண்டாம் இடம் பிடிக்கும். இதனால் இந்தியா செமி பைனல் செல்லாது.

இந்தியா தகுதிபெற வாய்ப்பு 2
வாய்ப்பு 2 -ஒருவேளை குழு ஆட்டத்தில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தினால், பாகிஸ்தான் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் மற்ற கத்துக்குட்டி அணிகளை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி முதல் இடம் பிடிக்கும். அப்படிப்பட்ட பட்சத்திலும் இந்தியா கண்டிப்பாக நியூசிலாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் முதல் இரண்டு வாய்ப்புகளிலும் இந்தியா கண்டிப்பாக நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும்.

வாய்ப்பு
வாய்ப்பு 3 - வாய்ப்பு மூன்றுபடி ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளிடம் பாகிஸ்தானோ, நியூசிலாந்தோ ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து. இந்தியா ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளிடம் வெல்லும் பட்சத்தில் இந்தியா எளிதாக செமி பைனல் செல்லும். இதனால் இந்திய அணி இனி வரும் போட்டிகளில் கவனமாக ஆட வேண்டும்.












Click it and Unblock the Notifications