விராட் கோலிதான் காரணமா.. ஆவேச விஸ்வரூபம் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்னாச்சு இவருக்கு?
துபாய்: சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீப காலங்களாக நடந்து கொள்ளும் விதம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ரகம்.
சாது மிரண்டால் காடு கொல்லாது, என்ற பழமொழிக்கேற்ப இப்போது அஸ்வின் காட்டிவரும் ஆக்ரோஷம், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய அணி கேப்டன் விராட்கோலி உடனான உரசலுக்கு பிறகுதான் , அஸ்வின் இப்படி ஆவேச அஸ்வினாக விஸ்வரூபம் எடுத்து விட்டார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

விராட் கோலி நடவடிக்கை
சரி, பஞ்சாயத்து எங்கே இருக்க ஆரம்பித்தது? இதுதான் விஷயம்: நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரின் போது அஸ்வின் அணியில் இருந்த போதிலும் கூட அணிக்குள் கொண்டு வராமல் உட்கார வைத்துவிட்டார் விராட் கோலி. நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சகல் வேண்டும் என்றும் அஸ்வின் வேண்டாம் என்றும் விராட்கோலி அணி நிர்வாகத்திடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அஸ்வினைத்தான் பிசிசிஐ தேர்ந்தெடுத்தது வேறு விஷயம். இந்த விஷயங்களால் தான் அமைதியாக இருந்த அஸ்வின் ஆத்திரக்காரராக மாறிவிட்டார் என்கிறார்கள்.

ஸ்லெட்ஜிங்
நேற்றும் இப்படித்தான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா வீரர் டிம் சவுத்தி வீசிய பந்தை அடிக்க முற்பட்டு அவுட்டானார் அஸ்வின். அவர் பெவிலியன் திரும்பும்போது டிம் சவுதி அவரிடம் ஏதோ பேச, பதிலுக்கு அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொல்கத்தா கேப்டன் மோர்கனும் வந்து சில வார்த்தைகளை பயன்படுத்த அஸ்வின் இன்னமும் அதிகமாக கோபம் அடைந்தார். கடுமையான மோதல் ஏற்படும் நிலையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உள்ளே வந்து அஸ்வினிடம் தமிழில் பேசி, சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார்.

என்ன பிரச்சினை
டெல்லி வீரர் ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும் போது அவரது கையில் பந்து பட்டபோதிலும் கூட அதற்கும் ரன் ஓடப்பட்டதாக தெரிகிறது. கையில் பந்து பட்டு ரன் ஓடுவது சரியான ஸ்போர்ட்மேன்ஷிப் கிடையாது. இதையொட்டி தான் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் களம்
முன்னதாக, சீனியர் வீரர்களுக்கு விராட் கோலி, இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பிசிசிஐ அமைப்பிடம் ஒரு மூத்த வீரர் புகார் அளித்ததாக விளையாட்டு தொடர்பான சில வெப்சைட் செய்திகளில் வெளியாகியுள்ளது. அந்த சீனியர் வீரர் அஸ்வின் தான் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இதன் பிறகுதான் 20 ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக விராட் கோலி அறிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.அஸ்வின் மற்றும் விராட் கோலி ஆகிய இரண்டு சீனியர் வீரர்களுக்கு இடையேயான மோதல் இப்போது ஐபிஎல் களத்திலும் எதிரொலிக்கிறது என்பதைத்தான் கோப சம்பவங்கள் உணர்த்துகின்றன.
Recommended Video

பட்லரை அவுட் செய்த அஸ்வின்
விராட் கோலியுடன், அஸ்வினுக்கு ஏற்பட்ட பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டது கிடையாது. கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஒரு போட்டியின்போது டெல்லி அணிக்காக பந்துவீசிய அஸ்வின், மன்கட் (mankad) என்ற முறையில் அவுட் செய்து விடுவதாக ஆரோன் பிஞ்சுக்கு எச்சரிக்கை விடுத்தார். போட்டிக்கு பிறகு அளித்த பேட்டியில் பந்து வீசுவதற்கு முன்பாகவே இந்த பக்கமாக நிற்கும் ஆரோன் பின்ச் ஓட ஆரம்பித்து விடுகிறார். அதை எச்சரிப்பதற்காக அவ்வாறு செய்தேன் என்று தெரிவித்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பட்லர் கிரீசை விட்டு வெளியேறிய போது இதே முறையில் அவரை அஸ்வின் அவுட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது என்ற சர்ச்சை எழுந்தது.

விராட் கோலி vs அஸ்வின்
பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் பேட்ஸ்மேனுக்கு வார்னிங் கொடுப்பார்கள். நடுவர்களை அழைத்து கூட வார்னிங் கொடுக்க வைக்கலாம். ஆனால் இந்த முறையில் அவுட் செய்வது ஸ்போட்ஸ்மன்ஷிப் இல்லை என்ற சர்ச்சைகள் எழுந்தன. சில வருடங்களாக இந்திய அணியில், அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தான் அவரும் ஆக்ரோஷமாக மாறிக் கொண்டிருக்கிறார். எனவே இதற்கு விராட் கோலி தான் காரணம் என்பது அவரது ரசிகர்கள் வாதமாக இருக்கிறது. ஆனால் அஸ்வின் நடவடிக்கைகள் காரணமாகத்தான் அணிக்குள் எடுப்பதற்கு விராட் கோலி தயங்குகிறார் என்பது அவரது ரசிகர்கள் வாதமாக இருக்கிறது.
-
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications