வியந்து பார்த்த "துர்கா".. சட்டென முதல்வர் காரை நோக்கி வந்த துபாய் தமிழர்.. என்ன சொன்னார் தெரியுமா?
துபாய்: துபாய் சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
4 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி மற்றும் அமீரக அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைப்பதற்காக துபாய் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று துபாய் எக்ஸ்போவை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் பல்வேறு தொழிலதிபர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

திறந்த வாகனம்
இந்த நிலையில் துபாய் சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரை அமீரக வாழ் தமிழர்கள் சிறப்பாக வரவேற்று உபசரித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் இன்று துபாய் எக்ஸ்போவை காண முதல்வர் ஸ்டாலின் திறந்த வாகனம் ஒன்றில் பயணித்தார். அவருடன் துர்கா ஸ்டாலினும் அதே வாகனத்தில் அமர்ந்து இருந்தார். அமீரக அமைச்சர்கள் இந்த வாகனத்தில் இருந்தனர்.

துர்கா ஸ்டாலின்
அதேபோல் அடுத்த வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் இருந்தார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகளும் இந்த காரில் இருந்தனர். இந்த காரை சுற்றி தமிழர்கள் நின்று அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது அங்கு இருந்த துபாய் தமிழர் ஒருவரிடம் பேசிய துர்கா ஸ்டாலின்.. ஏற்பாடு நன்றாக இருக்கிறது. நன்றிங்க.. போயிட்டு வரேன் என்று காரில் நகர்ந்தபடி கூறினார்.

பிரதமரா வரணும்
இந்த நிலையில் இன்னொரு பக்கம் இருந்த தமிழர்.. முதல்வர் ஸ்டாலினை நோக்கி வேகமாக வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் தனது கையை கூப்பி அவருக்கு வணக்கம் வைத்தார். இதையடுத்து அந்த தமிழர்... சார் அடுத்த முறை நீங்கள் பிரதமரா வரணும் சார். இங்கு நீங்க பிரதமரா வரணும் சார்.. ரொம்ப நன்றி சார் என்று குறிப்பிட்டார். இவரை வியந்து பார்த்துக்கொண்டு இருந்த துர்கா, அவரை பார்த்து வணங்கி நன்றி என்பது போல சொன்னார்.

ஸ்டாலின் துபாய் அமீரகம்
அதன்பின் பின்னால் இருந்த வாகனம் நோக்கி சென்ற அந்த தமிழர், சார்.. சூப்பர்.. ரொம்ப நன்றி என்று உதயநிதி ஸ்டாலினை நோக்கி கூறினார். அவரும் நட்பாக புன்னகைத்துவிட்டு காரில் நகர்ந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு துபாயில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று முதல்வர் ஸ்டாலின் துபாயில் பல்வேறு தொழிலதிபர்களை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications