Exclusive: தொடர் நாயகன் விருது! பாபர் ஆசமை ஓரங்கட்டியதன் பின்னணியில் பிசிசிஐ? வெடித்தது சர்ச்சை
துபாய்: டேவிட் வார்னருக்கு உலக கோப்பை தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
2021 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து நேற்று மோதின.
துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய வார்னருக்கு பார்மில் இல்லை என்று கூறி கேப்டன் பொறுப்பை பிடுங்கியது அணி நிர்வாகம். மேட்சை விட்டும் வெளியே வைக்கப்பட்டவர் டேவிட் வார்னர். கனே வில்லியம்சன் அந்த அணி கேப்டனாக்கப்பட்டார்.

டேவிட் வார்னர் அதிரடி
நேற்றைய போட்டியில் அதே கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்துக்கு எதிராக விட்டு விளாசி அரை சதம் கடந்து ஆஸ்திரேலியா பக்கம் மேட்சை கொண்டு வந்தார் டேவிட் வார்னர். அதுமட்டுமல்ல, இந்த தொடர் முழுக்கவே சிறப்பாக ஆடியுள்ளார் அவர். அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 49 ரன்கள் எடுத்தார். டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம், 289 ரன்களை டேவிட் வார்னர் எடுத்துள்ளார்.

பாபர் ஆசம்தான் அதிக ரன்கள்
இந்த நிலையில்தான், பிளேயர் ஆப் தி டோர்னமன்ட் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது. இதில்தான் சர்ச்சை எழுந்துள்ளது. ஏனெனில், உலக கோப்பை தொடரில், அதிக ரன்கள் குவித்தது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம். அவர் 303 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 60.60 ஆகும். டேவிட் வார்னர் 289 ரன்கள் எடுத்திருந்தார். சராசரி 48.16 ஆகும். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இதில் 3வது இடத்தில் உள்ளார். 70.25 என்ற சராசரியுடன், 281 ரன்கள் குவித்துள்ளார் அவர். இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 269 ரன்களும், இலங்கையின் அசலங்கா 231 ரன்களும் குவித்து, டாப் 5 பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் உள்ளனர்.

பாகிஸ்தான் ரசிகர்கள்
பாபர் அசாம் முதலிடம் பிடித்த போதிலும், தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டதை பாகிஸ்தான் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெருக்கடியால் பாபர் அசாமுக்கு விருது தரவில்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் போய் விட்டார்கள்.

முதல் முறை இல்லை
இருப்பினும், பிளேயர் ஆப் தி சீரிஸ் என்பது ரன் குவிப்பை அடிப்படையாக வைத்தது கிடையாது. இதற்கு உதாரணம் உள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவின் ரோகித் சர்மாதான் டாப் ஸ்கோரர். அவர் மொத்தம், 648 ரன்கள் குவித்தார். ஆனால் தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனுக்கு கொடுக்கப்பட்டது. அவர் எடுத்த ரன்கள் 578.

தொடர் நாயகன் யாருக்கு?
2019 உலக கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து இறுதிப் போட்டியில் மோதின. சூப்பர் ஓவர் வரை போன போட்டியில் இங்கிலாந்து வென்று சாம்பியனானது. அதாவது இறுதிப் போட்டி வரை அல்லது சாம்பியன் பட்டம் வெல்ல வைக்கும் அளவுக்கு போகும் அணியைச் சேர்ந்த அதிக ரன் குவித்த வீரருக்குதான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே டேவிட் வார்னருக்கு விருது கொடுக்கப்பட்டதில் பெரிய ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் கிரிக்கெட் புள்ளி விவர நிபுணர்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications