மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3,000 கோடி உதவி.. பெருந்துறையில் விஜய் கொடுத்த குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதியை வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடந்து வந்த வெற்றிப்பாதை குறித்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். இதையடுத்து, முதல்வர் விஜய் உருவம் பொறிக்கப்பட்ட அழகிய பத்தமடை பாய் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

Vijay Erode Visit Perundurai News Tamil Nadu Welfare Schemes

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முதல்வர் விஜய் பயணிக்கும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடாத வகையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை விமான நிலையம் முதல் நீலம்பூர் வரையிலான பகுதிகளிலும் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் நேற்று இரவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கோவை மாநகர ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், ஹோம் கார்டு பிரிவினர் மற்றும் சிறப்புப் படையினர் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருந்துறையில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இன்று மாலை சுமார் 5 மணியளவில் மீண்டும் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வரும் முதல்வர் விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

பெருந்துறை நிகழ்ச்சி

முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி முதலில் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கு மேடை அமைக்கும் பணிகள், ஹெலிபேடு அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

ஆனால், நேற்று திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது. கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி, காஞ்சிக்கோவில் லட்சுமி நாராயணா திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் புதிய இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டாலும், முதல்வரின் சாலைப் பயணத்தில் மாற்றம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, முதல்வர் வருகையை முன்னிட்டு 4,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகளிருக்கு ரூ.1,110 கோடி

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வங்கிக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் ரூ.1,110 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதியை வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடந்து வந்த வெற்றிப்பாதை குறித்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். இதையடுத்து, முதல்வர் விஜய் உருவம் பொறிக்கப்பட்ட அழகிய பத்தமடை பாய் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

சுமார் 5,000 பயனாளிகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெற உள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தங்களது தொழில்களை விரிவுபடுத்தவும் உதவும் வகையில் இந்த கடனுதவிகள் வழங்கப்பட உள்ளன.

செங்கோட்டையன் விளக்கம்

முன்னதாக, பெருந்துறையில் விஜய் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி இடைத்தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் நேற்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு செங்கோட்டையன், "முதலமைச்சர் விஜய் பெருந்துறைக்கு வருவது இடைத்தேர்தலுக்காக கிடையாது, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மகளிரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் 13 மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.. முதலமைச்சர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் அவரை காண வருவார்கள், முதலமைச்சர் வருகையே ஒரு ரோடு ஷோ போலத்தான்" என்று செங்கோட்டையன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கோவையில் இருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!பெருந்துறையில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் விஜய்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+