ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஈரோட்டில் நிற்க முடியாது".. எடப்பாடியிடம் "நோ" சொன்ன மாஜி.. அங்கே போய் முட்டிக்கணுமா? என்னாச்சு?

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக எடப்பாடி தரப்பு சிலரை அணுகியது. ஆனால் அவர்கள் போட்டியிட தயாராக இல்லை.

Google Oneindia Tamil News

ஈரோடு கிழக்கு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பால் வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை. கடந்த 10 நாட்களாக வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூடியூபிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக தேர்தல் கமிட்டி குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வேகம் காட்டி வருகிறது. இந்த தேர்தலை எடப்பாடி பழனிசாமி முக்கியமான தேர்தலாக கருதுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தொடக்கத்தில் இருந்தே தீவிரம் காட்டி வருகிறது. ஓ பன்னீர்செல்வம், பாஜக எல்லோரும் என்ன செய்கிறார்களோ.. அதை பற்றி கவலையில்லை.. நாம் போட்டியிடுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஆனாலும் எடப்பாடி தரப்பால் இன்னும் வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை.

வேட்பாளரை அறிவிக்க முடியாமல் எடப்பாடி தரப்பு திணறி வருகிறது. எடப்பாடி தரப்பில் அப்படி என்னதான் நடக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த எடப்பாடி.. 30 நிமிடங்கள்.. என்ன நடந்தது? ரகசியமாம்! திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த எடப்பாடி.. 30 நிமிடங்கள்.. என்ன நடந்தது? ரகசியமாம்!

பேட்டி

பேட்டி

அவர் அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி தரப்புதான் வலிமையாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஆட்கள் இல்லை. ஓபிஎஸ் தரப்பிற்கு நிர்வாகிகள் இல்லை என்று எடப்பாடி தரப்பு கூறி வருகிறது. ஆனால் அதே எடப்பாடி தரப்பால் வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை. கடந்த 10 நாட்களாக வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. எதிர்பக்கத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்துவிட்டது. 4-5 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

எடப்பாடி

எடப்பாடி

எடப்பாடி வேட்பாளரை நியமிக்காமல் தேர்தல் பணிக்குழுவை மட்டும் நியமித்துள்ளார். வேட்பாளரை இறக்காமல் 111 நிர்வாகிகளை தேர்தல் பணிகளை செய்ய மட்டும் களமிறக்கினால் என்ன நியாயம்? அவர்கள் காரில் போய் போஸ் மட்டும்தான் கொடுக்கிறார்கள். ஓபிஎஸ் ஒரு பக்கம் பாஜகவின் முடிவிற்காக காத்து இருக்கிறார். பாஜக என்ன முடிவு எடுக்கும் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். பாஜக அங்கே வேட்பாளரை களமிறக்கினால் ஓபிஎஸ் அங்கே களமிறக்கமாட்டார். தென் மாவட்டம் என்றால் ஓ பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு வேறு மாதிரி இருந்திருக்கும்.

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்


ஓ பன்னீர்செல்வத்தை விடுங்கள். தாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்று எடப்பாடி தரப்பு சொல்லும் கொங்கு மண்டலத்தில் அவர்களால் வேட்பாளரை களமிறக்க முடியவில்லை. 10 நாட்களாக வேட்பாளரை களமிறக்க முடியாமல் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கத்தை இங்கே களமிறக்க இங்கே முடிவு செய்துள்ளார். அவரிடம் குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலவு செய்யுங்கள். மீதம் உள்ள தொகையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி உள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று இவர் மறுத்து உள்ளார்.

நியமனம் இல்லை

நியமனம் இல்லை

அதனால் அவர் வேட்பாளராக நியமிக்கப்படவில்லை. தற்போது தென்னரசு, மனோகரன் போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த தேர்தலுக்காக எடப்பாடி தரப்பு சிலரை அணுகியது. ஆனால் அவர்கள் போட்டியிட தயாராக இல்லை. நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று இவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. முதல் காரணம் தோல்வி அடைய போகிற தேர்தலில் எதற்கு பணம் செலவு செய்ய வேண்டும். நீங்கள் பணம் செலவு செய்தால் நிற்கிறோம் என்று கூறி உள்ளனர்.

சின்னம்

சின்னம்

இரண்டாவதாக சின்னம் கிடைக்கும். சின்னம் கிடைத்தால்கூட கொஞ்சம் நல்ல வாக்கு எடுக்கலாம். சின்னம் இல்லாமல் எப்படி ஜெயிப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. சின்னம் கிடைத்தால் மரியாதையாக தோல்வி அடையலாம். சின்னம் இல்லாமல் ஏன் இந்த தேர்தலில் போய் முட்டிக்கொள்ள வேண்டும். ஏன் அவமானப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளே போட்டியிடலாமா வேண்டாமா என்று யோசிக்க இதுதான் காரணம். 10 நாட்களாக எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.

சிக்கல் ஏன்?

சிக்கல் ஏன்?

தொடக்கத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகள் இதில் கூட்டணி தர்மத்தை காக்கும் விதமாக இல்லை. உச்ச அதிகாரம் கொண்ட திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க தமிழ் மாநில காங்கிரஸ் விரும்பவில்லை. அதன்பின் ஈரோடு கிழக்கில் போட்டியிட விரும்பிய அதிமுக தரப்பு அதை பற்றி பாஜக தரப்பில் பேசி இருக்க வேண்டும். பாஜகவின் நிலைப்பாட்டை முதலில் கேட்டு இருக்க வேண்டும். ஆனால் பாஜக தலைவர்களை சந்திக்கும் முன்பே எடப்பாடி தரப்பு இங்கே போட்டியிட முடிவு செய்துவிட்டது. அதுதான் தவறு, என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

English summary
Few leaders in Edappadi Palanisamy are not ready to contest under AIADMK for Erode East By-Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X