”தேர்தலில் போட்டியில்லை.. தனித்து நின்றால் பெடாசிட் கூட வாங்க மாட்டேன்” ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு!
ஈரோடு: தேர்தலில் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.
செப்.7ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை தொடங்குகிறார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல் காந்தியின் பயணம் 3 நாட்களுக்கு பின் கேரளாவில் திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வருகையால், தமிழக காங்கிரஸ் கூடாரம் பரபரப்பாக இயங்கி வருகிறது.
ராகுல் காந்தியுடனான நடைபயணத்திற்கு என காங்கிரஸ் தொண்டர்களை திரட்டும் பணிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசுகையில், கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதாக நம்புகிறேன். ஆனால் கொங்கு மண்டலம் என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் சொந்தம் என்பது போல் பேசுகிறார்கள்.

இனி தேர்தலில் போட்டியில்லை
தேர்தலில் 5 முறை நான் போட்டியிட்டு 2 முறைதான் வெற்றி பெற்று இருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றபோது, நான் மட்டும் தோல்வி அடைந்தேன். இனி வரும் தேர்தல்களில் நான் போட்டியிடப் போவதில்லை. நான் தோல்வியடைந்ததால் அப்படி கூறவில்லை.

டெபாசிட் கிடைக்காது
இதற்கு முன் ஈரோடு, கோபி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளில் கூட தோல்வி அடைந்து இருக்கிறேன். அதனால் தோல்வி என்பது எனக்கு பெரிய விஷயமில்லை. எனக்கென்று தனிப்பட்ட மரியாதை பெரியளவில் இல்லை. ஒரு சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே என் மீதான மரியாதையில் கிடைக்கும். எப்போதும் கட்சி சார்ந்துதான் வாக்குகள் கிடைக்கும். நான் தனியாக நின்றால் டெபாசிட்கூட பெறமுடியாது என்று தெரியும்.

அண்ணாமலை மீது விமர்சனம்
காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இருந்த தமிழகத்தில் அண்ணாமலை வால் ஆட்டினால் நறுக்கப்படும். தமிழகத்தில் இரு பாஜக தலைவர்கள் இருக்கிறார்கள். அண்ணாமலையும், ஆர்.எஸ்.எஸ்.ரவியும். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்.

திமுகவுடன் கூட்டணி
திமுக கூட்டணி காரணமாக நமது கட்சியை சோ்ந்தவர்கள் எம்எல்ஏ-வாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலின்போது திமுகவுடன் இணைந்து செயல்படக்கூடாது என்று நமது கட்சியை சேர்ந்தவர்கள் குறுந்தகவல் அனுப்பினார்கள். இது ராகுல்காந்தியை பிரதமராக்க விடக்கூடாது என்பதைபோல் உள்ளது. எனவே இதுபோன்ற செயல்பாடு கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications