ராகுல் காந்தியை திருமணம் செய்ய ரெடி! யார் இந்த நடிகை ஷெர்லின் சோப்ரா? அச்சச்சோ இவரா? பின்னணி
டெல்லி: பத்திரிகை ஒன்றுக்கு ஆடையின்றி போஸ் கொடுத்த நடிகையும், மாடல் அழகியுமான ஷெர்லின் சோப்ரா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை திருமணம் செய்வது தொடர்பான கேள்விக்கு‛ஓகே' சொல்லிய வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் ராகுல் காந்தி அந்த பொறுப்பை ராஜினாமா செய்தார். வயநாடு தொகுதி எம்பியாக அவர் தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையே தான் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் கோலார் பிரசாரத்தில் அவர் பேசியது மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்லெ்ஏ புர்னேஷ் மோடி இந்த வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்பியானார். ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து நேற்று நாடாளுமன்ற லோக்சபா செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து நேற்று ராகுல் காந்தி எம்பியாக நாடாளுமன்றத்தின் லோக்சபாவுக்கு சென்று தனது இருக்கையில் அமர்ந்தார். இந்நிலையில் தான் இன்று நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இன்றைய நாடாளுமன்றத்தின் லோக்சபா கூட்டம் அதிக கவனம் பெற உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியை திருமணம் செய்ய நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா ‛ஓகே' சொல்லிய வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ராகுல் காந்திக்கு தற்போது 53 வயது ஆகிறது. அவர் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி மற்றும் தங்கை பிரியங்கா காந்தியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன.
சமீபத்தில் கூட சோனியா காந்தி இல்லத்தில் ஹரியானா பெண் விவசாயிகளுக்கு ராகுல் காந்தி விருந்து வழங்கினார். அப்போதும் சோனியா காந்தியிடம் பெண் ஒருவர் ராகுல் காந்தியின் திருமணம் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு அவர் நீங்களே பெண் பாருங்கள் என தெரிவித்த வீடியோ வெளியாகி வேகமாக பரவியது. இத்தகைய சூழலில் தான் ஷெர்லின் சோப்ரா, ராகுல் காந்தியை திருமணம் செய்ய ஒரு கண்டிஷனுடன் ஓகே சொல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது ஷெர்லின் சோப்ரா தனது ரசிகர்களுடன் ‛செல்பி' எடுக்க போஸ் கொடுத்தபோது அவரிடம், ‛ராகுல் காந்தியை திருமணம் செய்வீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ஏன் இல்லை. ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வேன். ஆனால் ஒரு கண்டிஷன். திருமணத்துக்கு பிறகு எனது குடும்ப பெயரை என் பெயருக்க பின்னால் பயன்படுத்துவேன்'' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயாராக இருக்கும் ஷெர்லின் சோப்ரா நடிகையாகவும், மாடல் அழகியாகவும் உள்ளார். இவர் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தாய் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இவரது தந்தை டாக்டராக உள்ளார். ஷெர்லின் சோப்ரா கடந்த 1999ல் ‛மிஸ் ஆந்திரா' பட்டத்தை வென்றார். அதன்பிறகு 2002ல் திரைத்துறையில் கால்பதித்தார். தமிழ், தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
2002ல் தமிழில் இயக்குனர் பிரகதீஷ் இயக்கத்தில் வெளியான யூனிவர்சிட்டி திரைப்படத்தில் ஷெர்லின் சோப்ரா, நடிகர் ஜீவனுடன் நடித்திருந்தார். மேலும் ஷெர்லின் சோப்ரா ‛பிளேபாய்' பத்திரிகையில் ஆடையின்றி போஸ் கொடுத்த முதல் நபர் என்ற பெயரை பெற்றார். இந்த போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். மேலும் மியூசிக் சார்ந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications