• search
ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

எங்களது இல்லத்திற்கு வந்த எங்களது பிள்ளை... பேரறிவாளன் குறித்து திமுக மூத்த தலைவர் 'சுப்பு' அக்கா!

Google Oneindia Tamil News

ஈரோடு: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் மொடக்குறிச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், இன்று எங்களது இல்லத்திற்கு 32 வருடங்களுக்கு பின்னர் வந்த எங்களது பிள்ளை !!! என நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார் பேரறிவாளன்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் நெகிழ்ச்சி

சுப்புலட்சுமி ஜெகதீசன் நெகிழ்ச்சி

இதேபோல் சேலம் மேட்டூரில் திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் கொளத்தூர் தா.செ.மணி, சேலத்தில் திமுக எம்.எல்.ஏவும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கோவையில் திராவிடர் இயக்க இரட்டையர்களான கோவை ராமகிருட்டிணன்- ஆறுச்சாமி உள்ளிட்டோரை பேரறிவாளன் சந்தித்தார். மேலும் மொடக்குறிச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வீட்டுக்கும் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், இன்று எங்களது இல்லத்திற்கு 32 வருடங்களுக்கு பின்னர் வந்த எங்களது பிள்ளை !!! என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

சுப்பு அக்கா

சுப்பு அக்கா

திராவிட இயக்கத்தினர் மற்றும் திமுகவினரால் வாஞ்சையுடன் சுப்பு அக்கா என அழைக்கப்படுவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். 1977-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னர் திமுகவில் இணைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசில் அமைச்சராகவும் பின்னர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் எனும் சுப்பு அக்கா. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியதாக தடா சட்டத்தின் கீழ் கணவருடன் 1992-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 11 மாதம் சிறை தண்டனை அனுபவித்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு எதிராக 1036 பேர் போட்டியிட்டனர். ஆனால் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார்.

ஜெ.ஆட்சியில் கைது

ஜெ.ஆட்சியில் கைது

தமது கைது தொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னர் கூறுகையில், எனது கைது என்பது முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக பழிவாங் கவே போடப்பட்ட பொய் வழக்கு. ராஜீவ்காந்தி கொலை சம்பவத்திற்கும் தி.மு.க.விற்கும் இம்மி அளவு கூட சம்பந்தமே இல்லை என தெரிந்தும் மக்களிடம் தி.மு.க.வைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. ராஜீவ்காந்தி கொலை வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்தது. தி.மு.க.வினரை பழிவாங்குவதற்காகவே ஜெயலலிதா தனியாக ஒரு புலனாய்வு பிரிவை உருவாக்கினார். விடுதலைப்புலிகள் சிலருக்கு அடைக்கலம் கொடுத்ததாக 9.1.1992ல் என்னையும் எனது கண வரையும் டான்சிட் போலீசார் கைது செய்த னர். கைது வாரண்ட் எதுவுமே இல்லாமல் எங்களைக் கொண்டுபோய் மதுரை மத்திய சிறையில், என் கணவரை ஆண்கள் சிறையிலும் என்னை பெண்கள் சிறையிலும் அடைத்தார்கள் என்றார்.

சுப்பு அக்காவின் விடுதலைப் போராட்டம்

சுப்பு அக்காவின் விடுதலைப் போராட்டம்

மேலும் நான் 14 முறை ஜாமீன் மனு போட்டேன். எல்லாவற்றையும் அரசு வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்து டிஸ்மிஸ் செய்ய வைத்தார். 11 மாதம் எங்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யாமல் சிறையில் வைத்திருந்தனர். உச்சநீதிமன்றத்தில் மூன்றுமுறை நீதிக்கான போராட்டம் நடத்திதான் ஜாமீனில் வெளியே வந்தோம். 1998-ல் இதே தடா கோர்ட் எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் நூல் அளவுகூட சம்பந்தம் இல்லை, நிரபராதிகள் என விடுதலை செய்தது என்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன் எனும் சுப்பு அக்கா.

English summary
Pearivalan met DMK Deputy General Secretary subbulakshmi jagadeesan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X