இப்படி சோரம் போகலாமா? ஈரோடு ரிசல்ட்டை பார்த்து கடிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி.. என்னாச்சு?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் திமுக 1,15,709 வாக்குகளை பெற்றது. அது போல் நாம் தமிழர் கட்சி 24,151 வாக்குகளை பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் இடைத்தேர்தல் நடந்தது. அங்கே 65.72% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் இங்கே 75 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த முறை 10 சதவிகிதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகியதால் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. பாஜக இதில் போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிகவும் போட்டியிடவில்லை. காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடந்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்:
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஈரோடு மாவட்ட செயலாளர் உட்பட நிர்வாகிகள் பலரிடமும் விசாரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, திமுக பெற்ற வெற்றி அப்படியொன்றும் பெரிய விசயம் இல்லை அண்ணே. எதிர்பார்த்தது தானே. ஆளில்லாத மைதானத்தில் சிக்சர் அடிச்சி என்னப்பயன்? திமுக மீது அதிருப்திகள் அதிகம் இருப்பதைத்தான் முடிவுகள் காட்டுகிறது'' என்று விளக்கமளித்திருக்கிறார்கள்.
அதற்கு, ''தேர்தலை அதிமுக புறக்கணித்துவிட்டது. அப்படியெனில், நம் கட்சியினர் வாக்களிக்காமல் புறக்கணித்திருக்க வேண்டும். இல்லைன்னா, திமுகவை எதிர்க்கும் கட்சிக்கு ஓட்டளித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் திமுகவுக்கு அடி விழுந்திருக்கும். ஆனா, நீங்க ரெண்டையுமே பண்ணாமல், திமுகவிடம் காசு வாங்கிட்டு அக்கட்சிக்கு ஓட்டுப்போட்டுட்டீங்க.
அதைத்தான், அதாவது அதிமுகவும் ஓட்டும் எங்களுக்கு கிடைச்சிருக்கு என்று திமுகவுக்கும் இப்போ பிரச்சாரம் செய்யுது. இது நமக்கு தேவையா? இப்படி சோரம் போகலாமா? என்று கடிந்துகொண்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு அதிமுக நிர்வாகிகள் சிலர், எதிர்க்கட்சி வாக்காளர்களுக்கு திமுக ஒரு ஓட்டுக்கு 2000 ரூபா கொடுத்தது உண்மைதான் அண்ணா. ஆனா, அப்படி காசு கொடுத்து வளைக்கப்பட்ட ஓட்டு அதிமுக ஆதரவு ஓட்டு தானே தவிர, நம் கட்சி ஓட்டு இல்லை அண்ணா. நம் கட்சிக்காரன் யாரும் சோரம் போகலை அண்ணா என்று விளக்கமளித்திருக்கிறார்கள்.
அதிமுக ஈரோடு கிழக்கு ஏன் புறக்கணிப்பு:
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.
இந்த மோசமான தோல்வியடைந்தால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று ஆகிவிடும் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications