ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டெல்லி போங்க".. முக்கிய ரிப்போர்ட்டோடு பறந்த புள்ளி.. ஈரோடு கிழக்கில் அண்ணாமலை முடிவு என்ன? அதுவா?

ஈரோடு கிழக்கு தொகுதி குறித்து சர்வே எடுக்க தனியார் ஏஜென்சியிடம் சொல்லியிருந்தார் அண்ணாமலை. அந்த ரிசல்ட் தயாராகி உள்ளது. அந்த ரிசல்ட்டை தற்போது அண்ணாமலை டெல்லிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் சரியான முடிவை எடுக்க முடியாமல் பாஜக திணறிக்கொண்டு இருக்கிறது. எந்த முடிவை எடுத்தாலும் ஆபத்து என்ற நிலைதான் அந்த கட்சிக்கு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக முடிவு செய்துள்ளது.

அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவும் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறது. பாஜக இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து இருக்கிறார்.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..போட்டியில் இருந்து விலகிய சமக..யாருக்கும் ஆதரவு இல்லை..சரத்குமார் அதிரடி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..போட்டியில் இருந்து விலகிய சமக..யாருக்கும் ஆதரவு இல்லை..சரத்குமார் அதிரடி

பாஜக முடிவு

பாஜக முடிவு

ஆனால் பாஜக இதுவரை இதில் முடிவு எதுவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறது. பாஜகவிற்கு இதில் 3 ஆப்ஷன்கள் இருக்கின்றன. தேர்தலில் போட்டியிடுவது அல்லது எடப்பாடி தரப்பை ஆதரிப்பது அல்லது ஓ பன்னீர்செல்வம் தரப்பை ஆதரிப்பது. முதல் ஆப்ஷன் படி பார்த்தால்.. பாஜக தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்தால் நல்ல வாக்கு வங்கியை பெற வேண்டும். ஈரோடு கிழக்கில் மோசமான வாக்கு வங்கியை பெற்றால் அது பாஜகவிற்கு பெரிய பின்னடைவை கொடுக்கும். வாக்கு வங்கி மட்டும் குறைந்தால் கொங்கிலேயே பாஜக சரிந்துவிட்டது என்ற கடும் விமர்சனங்கள் வைக்கப்படும். இது பாஜக வளர்ந்து வருகிறது என்று பிம்பத்தை காலி செய்துவிடும்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஒருவேளை எடப்பாடியை அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால் ஓ பன்னீர்செல்வம் தரப்பை கழற்றிவிட்டது போல ஆகிவிடும். அதோடு எடப்பாடி அதிமுகவின் ஒற்றை தலைமை என்ற நிலையை உருவாக்கிவிடும். இதனால் அதிமுக எதிர்க்கட்சியாக வலிமையாக காட்சி அளிக்கும். தமிழ்நாட்டில் ஒற்றை எதிர்க்கட்சியாக உருவெடுக்க விரும்பும் பாஜகவிற்கு இது சிக்கலாகும். இதனால் எடப்பாடியை அண்ணாமலை, பாஜக ஆதரிக்க யோசிக்கும். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்தாலும் சிக்கல். ஓ பன்னீர்செல்வம் வேட்பாளர் மோசமாக தோல்வி அடைந்தால், பாஜக ஆதரித்தே ஓபிஎஸ் வேட்பாளர் தோற்றுவிட்டாரே என்று விமர்சனங்கள் வைக்கப்படும்.

பாஜக சிக்கல்

பாஜக சிக்கல்

போட்டியிடாமல், யாருக்கும் ஆதரவு அளிக்காமல் போனாலும் பாஜகவிற்கு பெரிய சிக்கல் ஆகும். மொத்தத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் சிக்கல் என்ற நிலைதான் பாஜகவிற்கு உள்ளது. இந்த நிலையில்தான் பாஜக ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று தேசிய தலைமை ஆர்வம் காட்டி வருகிறது. மோதி பார்த்துவிடுங்கள் என்று டெல்லி பாஜக தலைகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம். ஈரோடு கிழக்கில் வேட்பாளர் அண்ணாமலையா? அல்லது வேறு நபரா ? என்பதை ஆலோசிக்கிறதாம். அண்ணாமலையை தவிர்த்தால் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த வலிமையான பாஜகவினர் யார் இருக்கிறார் ? செங்குந்த முதலியார் சமுகத்தில் பாஜகவில் வலிமையானவர் யார் இருக்கிறார் ? என்ற தேடுதலும் துவங்கியுள்ளது.

சர்வே

சர்வே

இதற்கிடையே, தொகுதியை சர்வே எடுக்க தனியார் ஏஜென்சியிடம் சொல்லியிருந்தார் அண்ணாமலை. அந்த ரிசல்ட் தயாராகி உள்ளது. அந்த ரிசல்ட்டை தற்போது அண்ணாமலை டெல்லிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிப்போர்ட்டோடு முக்கியமான புள்ளி ஒருவரையும் தமிழ்நாடு பாஜக டெல்லிக்கு அனுப்பி உள்ளதாம். அந்த ரிப்போர்ட்டில் பாஜக போட்டியிடுவதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாகவே தகவல்கள் இடம்பெற்று உள்ளதாம். ரிப்போர்ட்டோடு டெல்லி சென்று இருக்கும் அந்த குறிப்பிட்ட நிர்வாகிதான் ஈரோடு கிழக்கில் போட்டியிட போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. அவரையே ஈரோடு கிழக்கில் பாஜக களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

English summary
What will be the decision of Annamalai in Erode East By-Election? What is he planning?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X