சென்னையை தொடர்ந்து ஈரோட்டில் ’பகீர்’.. ஜெயிலில் தள்ளிய ஆத்திரத்தில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் காதலித்து வந்த அந்த மாணவியால், தான் ஜெயிலுக்குப் போக நேர்ந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஜாமீனில் வந்து அந்தப் பெண்ணைக் கொல்ல முயன்றுள்ளார் அந்த இளைஞர்.
காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னையில், தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்த நிலையில், காதல் விவகாரத்தில் தன்னை சிறையில் தள்ளியதற்காக மாணவியை கொலை செய்ய முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி கழுத்தை அறுத்த இளைஞர்
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் வசிக்கும் கண்ணம்மாள் என்பவரது மகள் ஸ்வேதா (16). ஸ்வேதா, சத்தியமங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளியில் இருந்து பேருந்தில் பவானிசாகர் திரும்பி, பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் திடீரென மாணவி ஸ்வேதாவின் கழுத்தை, தனது கையில் வைத்திருந்த பிளேடால் அறுத்துள்ளார்.

பிளேடால் அறுத்து
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று தடுக்க முயன்றுள்ளனர். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிளேடால் அறுக்கப்பட்டதில் காயமடைந்து ரத்தம் வழிய நின்ற மாணவி ஸ்வேதாவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நவீன்குமார்
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் போலீசார், மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் பற்றி விசாரணை நடத்தியதில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞன் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் நவீன்குமார் என்பது தெரியவந்தது.

காதல் தகராறு
நவீன் குமார், மாணவி ஸ்வேதாவை காதலித்து வந்துள்ளார். தனது காதலை அவரிடம் சொன்ன நிலையில், ஸ்வேதாவின் பெற்றொருக்கு இந்த விவகாரம் தெரிந்து, போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவிக்கு தொல்லை கொடுத்த நவீன்குமாரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

கைது
இதையடுத்து, ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த நவீன் குமார், தன்னை மாட்டிவிட்டு ஜெலிலில் அடைத்த ஸ்வேதாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவரை பின் தொடர்ந்து சென்று, கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து, நவீன்குமாரை வலைவீசித் தேடிய போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications