என்ன ஒரு பைத்தியகாரத்தனம்.. கவரில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்.. ஓசூரில் ஷாக்
ஓசூர்: ஓசூரில் கட்டிடத்தொழிலாளி மன உளைச்சலால் நாக்கை கத்தியால் வெட்டிக்கொண்ட நிலையில், துண்டான நாக்கை ஒட்ட வைக்க கவரில் அவரது பிள்ளைகள் எடுத்துவந்தனர்.
Recommended Video
ஆனால் துண்டான நாக்கில் ரத்த ஓட்டம் இல்லாததால் அதை இணைத்தாலும் தோல்வி தான் என்றும் பேசுவதற்கு பிரச்சனை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, வசந்த் நகரில் குடியிருந்து வருபவர் முருகேசன்(58). கட்டிடதொழிலாளியான இவருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நாக்கை வெட்டினார்
எப்போதும் மன உளைச்சல், வேதனையுடன் பிறரிடம் பழகாமல் தனித்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கத்தியால் தனது நாக்கை தானே வெட்டிக்கொண்டுள்ளார். துண்டான நாக்கை கவரில் எடுத்து வந்த முருகேசனின் பிள்ளைகள், ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பிள்ளைகள் விளக்கம்
முருகேசனின் பிள்ளைகள் கூறுகையில், நேற்று முன்தினம் முதல் சைக்கோ மனிதனை போல திரிந்து வந்ததாகவும் நேற்று காலை யாரும் எதிர்பாராத விதமாக நாக்கை துண்டித்துக்கொண்டார்.

பேசுவதில் பிரச்சனை இல்லை
பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் துண்டான நாக்கில் இரத்த ஓட்டம் இல்லாததால் இணைக்கும் பணி செய்தாலும் அது தோல்வி தான் என்றும் பேசுவதற்கு பிரச்னை இல்லை என்றும் கூறினார்கள் என்றார்கள்.

சைக்கோ
மன உளைச்சல் காரணமாக நாக்கை துண்டு துண்டாக கூலித்தொழிலாளி வெட்டிக்கொண்டது ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கப்பட்டதாக தெரியவில்லை. சைக்கோதனமான மனநிலையில் இப்படியும் சிலர் செய்வது ஆங்காங்கே நடக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications