கர்நாடகா ஓகே சொல்லலைன்னா என்ன? ஓசூர் மெட்ரோவில் தமிழ்நாடு மும்முரம்.. வெளியான ஆக்சன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு மெட்ரோ கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில் ஓசூரில் விரைவில் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன.

ஓசூரில் மெட்ரோவை கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், பெங்களூரு, கர்நாடகாவில் உள்ள பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டின் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் பாதையை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (டிஎஃப்ஆர்) தயாரிப்பதற்காக 11 நிறுவனங்கள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திடம் ஏலம் சமர்ப்பித்துள்ளன.

Tamil Nadu to go ahead with Hosur Bangalore Metro : Bidders are already in, soon report will be submitted

மெட்ரோ பாதை: NH-44 இல் சுமார் 18 கிமீ நீளமுள்ள இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பாதை அட்டிபெல்லே வழியாக செல்லும். இதில் 11.5 கிமீ பாதை கர்நாடகாவில் அமைந்துள்ளது மற்றும் மீதமுள்ள 6.5 கிமீ தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும் நிறுவனம், மெட்ரோ பாதை, மெட்ரோ வகை (மெட்ரோ, மெட்ரோலைட், மெட்ரோ நியோ), மதிப்பிடப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை, எத்தனை நிலையங்கள் & டிப்போவின் இருப்பிடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுமான செலவுகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை மேற்கொள்ளும். இதை தயாரிக்கவே தற்போது ஏலம் விடப்பட்டு உள்ளது.

CMRL 180 நாள் நிறைவு காலக்கெடுவுடன் ரிப்போட்டை தயாரிக்க வேண்டும் என்று கூறி ஆகஸ்ட் 2023 இல் ஆலோசகரை நியமிப்பதற்கான ஏலங்களை விடுத்தது. இதில் பின்வரும் 11 ஏலதாரர்களை முதல் கட்டமாக தேர்வு செய்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில் கடைசியில் ஒரு நிறுவனம் தேர்வுசெய்யப்படும் .

  1. ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். லிமிடெட்
  2. Almondz Global Infra-Consultant Ltd.
  3. பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்
  4. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் கர்நாடகா லிமிடெட்.
  5. எல்&டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினியரிங் லிமிடெட்.
  6. Meinhardt EPCM (இந்தியா) பிரைவேட் லிமிடெட்.
  7. ரினா கன்சல்டிங் ஸ்பா
  8. RITES Ltd.
  9. ஸ்ரீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடெட்
  10. SYSTRA MVA கன்சல்டிங் (இந்தியா) பிரைவேட். லிமிடெட்
  11. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொண்டுள்ளன.

( மெட்ரோ சுரங்கத்திற்கு மேலே பில்லர்.. பொறியியல் அதிசயம்.. அண்ணா சாலையில் வரும் ராட்சச 4 வழி பாலம் )

கர்நாடகா எதிர்ப்பு: ஓசூரில் உருவாக்கப்பட உள்ள மெட்ரோவோடு பெங்களூர் மெட்ரோவை இணைப்பதற்கு கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் நகரைவிட வளர்ச்சியில் ஓசூர் தற்போது வேகம் எடுத்துள்ளது. விலை குறைந்த நிலம், பெங்களூரின் அதே கிளைமேட், அரசியல் ரீதியாக அதிக சிரத்தன்மை, நல்ல போக்குவரத்து, டிராபிக் இல்லை உட்பட்ட காரணங்கள் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது.

முன்பெல்லாம் சென்னைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த முதலீடு கவனம் தற்போது மற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஓசூரும் வேகமாக வளர்கிறது.

Tamil Nadu to go ahead with Hosur Bangalore Metro : Bidders are already in, soon report will be submitted

விரும்பவில்லை: இதனால்தான் கர்நாடகா இதை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. தற்போது பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. இங்கே பணிகள் முடிந்த பின் ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இதை விரும்பவில்லையாம். சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், ஓசூரில் குறைந்த வாழ்க்கைச் செலவு மிக மிக குறைவு. அதேபோல் தொழில்துறை நிலம் கிடைப்பது மிகவும் எளிது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால் பெங்களூருக்கு எதிராக இந்த விஷயம் திரும்பும். இதனால் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ திட்டம் கர்நாடகாவிற்கு எதிராக மாறக்கூடும் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார.

20.5 கிமீ மெட்ரோ பாதையில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை CMRL ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதில் முனைப்பு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓசூருக்குள் மட்டும் கூடுதல் கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ அமைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+