"சூப்பர்ல.!" எவ்வளவு உயரம் சென்றாலும் பழச மறக்காத சத்யா நாதெல்லா! என்ன செஞ்சு இருக்காரு பாருங்க
வாஷிங்டன்: உலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான சத்யா நாதெல்லா சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். இங்கே எதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐடி துறையில் இந்தியர்கள் டாப் இடத்தில் இருக்கிறார்கள்.. சர்வதேச அளவில் இந்த துறையில் இந்தியர்கள் தேவை அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல டாப் டெக் நிறுவனங்களின் சிஇஓக்களாக இந்தியர்கள் இருப்பதே இதற்கான சாட்சி.

அப்படி டெக் உலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் சத்யா நாதெல்லா.. இவர் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
சத்யா நாதெல்லா: என்ன தான் மைக்ரோசாப்ட் சிஇஓ பதவிக்குச் சென்றாலும் கூட சத்யா நாதெல்லா தான் இருந்த இடத்தை மறக்கவில்லை.. டெக் உலகில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தலைவராக இருந்தாலும் கூட அவர் தனது தாயகத்தை மறக்கவில்லை. அவர் அப்படி என்ன செய்தார்.. அவர் செய்தது எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் இப்போது ஏஐ துறை இப்போது மிகப் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தத் தயாராகி வரும் நிலையில், இந்தியாவிலும் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் காலத்தில் உலகை மொத்தமாக இந்த ஏஐ மாற்றிப்போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏஐ மாடல்களை இந்திய மொழிகளில் தரும் நடவடிக்கையில் பல்வேறு நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இப்போது இந்த ஏஐ மாடல்கள் வெறுமன டெக்ஸ்ட் மட்டும் கொண்டிருந்தாலும் கூட வரும் காலத்தில் இதில் ஆடியோவும் வரும்.
இந்தியக் கிராமங்கள்: அப்படி ஏஐ ஆடியோவாக வரும் போது இந்தியா போன்ற நாட்டில் உள்ளூர் மொழியில் அவை இருந்தால் மட்டுமே மக்களிடம் சென்று சேரும். அதற்கான பணிகளைத் தான் இப்போது மைகோசாப்ட் ஆரம்பித்துள்ளது. இந்த ஏஐ மாடல்களின் வளர்ச்சிக்கு இந்தியக் கிராம மக்கள் பெரும் பங்களிப்பைக் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் இந்தியா வந்திருந்த அவர், ஏஐ மாடல்கள் மிகப் பெரிய திறனைக் கொண்டிருப்பதாகவும் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்புகளைக் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மகாராஷ்டிரா காரிய என்ற நகரில் ஏஐ மாடல்களை மொத்தமாக மாற்றப் பங்களிப்பைத் தரும் மக்களை இந்தியாவில் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ஏஐ மாடல்களுக்கு ஹை குவாலிட்டி டேட்டா செட்களை வழங்கும் அதே நேரத்தில், இந்த வாய்ப்பு இவர்கள் பொருளாதார ரீதியாகவும் முன்னேற உதவி இருக்கிறது.. மராத்தி மொழியில் இவர்கள் ஏஐ மாடல்களை வளர்க்க உதவுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட்: அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவில், உங்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால் தொழில்நுட்பத்தை அணுகுவது கடினம் என்ற நிலையே இருக்கிறது.. ஆங்கிலம் மற்றும் இந்தி பேசு தெரியாதவர்களுக்கும் அனைத்து டூல்களும் சென்றுசேர வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து மொழிகளிலும் இந்த டூல்களை கொடுப்பதன் மூலம் மக்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாராட்டுவது ஏன்: மகாராஷ்டிரா மாநிலம் காரடி என்ற பகுதியில் வாழும் மக்கள் இந்த ஏஐ மாடல்களைுக்கு மராத்தி மொழியில் பயிற்றுவித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் தினசரி அந்த செயலியில் இருக்கும் கதைகள், புத்தகங்களைப் படிக்கிறார்கள். அவை செயலியில் எடுத்துக்கொள்ளப்பட்டு டேட்டா செட்களாக மாற்றப்படும். இதன் மூலம் ஏஐ மாடல்களை பயிற்றுவிப்பார்கள். பொதுவாக இதுபோன்ற டேட்டா செட்கள் பெருநகரங்களில் இருந்தே பெற்றுவிடுவார்கள்.
ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டேட்டா செட்கள்களை மகாராஷ்டிராவில் இருக்கும் கிராம மக்களிடம் இருந்து பெறுகிறது. இது அந்த கிராம மக்களின் வாழ்வாராதத்திற்கு பெரியளவில் உதவுகிறது. கிராம மக்களின் வளர்ச்சிக்கு உதவும் மைக்ரோசாப்ட்டின் இந்த முடிவே இப்போது நெட்டின்சன்கள் பலரும் சத்யா நதெல்லாவை பாராட்டக் காரணமாக இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications