ஈவு இரக்கமே இல்லாமல்.. 4 வயது குழந்தையை 2 மாதமாக.. அதுவும் பள்ளியிலேயே.. ஹைதராபாத்தில் கொடூரம்
ஹைதராபாத்: பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 4 வயது குழந்தையை கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 4 வயது சிறுமியை அப்பள்ளியை சேர்ந்த ஊழியர் ஒருவர் கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வயது சிறுமி
4 வயது சிறுமி கடந்த சில நாட்களாகவே மிகவும் சோர்வாக இருந்துள்ளார். வகுப்பறையில் பாடத்தை கவனிக்க முடியாமலும், வீட்டுக்கு சென்றால் உடனே தூங்கிவிடுவுதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பெற்றோரிடம் நேற்று விரிவாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர் சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்று சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உறுதி செய்தனர். பின்னர் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

கொலை மிரட்டல்
குற்றம்சாட்டப்பட்டுள்ள ரஜினி குமார் என்று அழைக்கப்படும் அந்த நபர் பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் கடந்த 2 மாதங்களாக இவர் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், சமீபத்தில் பள்ளி முதல்வர் அறைக்கு எதிரே உள்ள ஆய்வக அறையில் வைத்து பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த விஷயம் வெளியில் யாருக்கேனும் தெரிய வந்தால் உன்னை கொன்று விடுவேன் என குழந்தையை மிரட்டியுள்ளார்.

புறக்கணிப்பு
இதனையடுத்து ரஜினி குமாரை IPC பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் இவரால் வேறு ஏதேனும் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளாரா என்றும் விசாரித்து வருகின்றனர். சினிமாக்களிலும், தொடர்களிலும், இலக்கியங்களிலும் ஏன் விளம்பரங்களில் கூட பெண்கள் ஒரு போகப்பொருட்களாகவே காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுடன் நாம் தொடர்ந்து உரையாட வேண்டியுள்ளது என மகளிர் அமைப்புகள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பெண்களை இவ்வாறு காட்சிப்படுத்தும் அனைத்தையும் நாம் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
4 வயது குழந்தையை பள்ளியில் வைத்து 2 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications