சிறு தவறால் வந்த வினை.. புது காருடன் மாடியில் இருந்து பாய்ந்த வாடிக்கையாளர்.. பதைபதைக்கும் வீடியோ!
ஹைதராபாத்: தெலுங்கானா ஷோரூமில் புது காருடன் மாடியில் இருந்து பாய்ந்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக கார் என்பது பணக்காரர்களின் வாகனம் என்ற போதிலும் தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை தங்களது கார் ஆசையை நிறைவேற்றி விடுகின்றனர்.
இப்படி ஆசையுடன் கார் வாங்க ஷோரூமுக்கு சென்ற ஒருவர் புது காருடன் வீட்டுக்கு திரும்பாமல் மருத்துவமனைக்கு சென்ற சோக சம்பவம் நடந்துள்ளது.
புது கார் வாங்க சென்றார்
தெலுங்கானா மாநிலம் ஆல்காபோரில் உள்ள டாடா ஷோரூமுக்கு புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் எல்.ஐ.சி ஊழியர் பி.பகவத்,(59) சென்றார். ரூ.6.40 லட்சத்தில் தனக்கு பிடித்தமான காரையும் தேர்வு செய்தார். அந்த கார் ஹைட்ராலிக் லிப்ட் மூலம் முதல் தளத்தில் இருந்து தரைதளத்திற்கு இறக்குவதற்கு தயாராக இருந்ததது. தான் புதியதாக வாங்கிய காரில் பி.பகவத் ஏறி அமர்ந்து இருந்தார்.

ஆக்சிலேட்டரை அழுத்தினார்
அந்த ஷோரூம் ஊழியர்கள் காரின் சிறப்பம்சங்கள் குறித்து பகவத்திடம் எடுத்து சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது பகவத் எதிர்பாராதவிதமாக தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தி விட்டார். இதனால் அதிவேகமாக சென்ற கார் முதல் மாடியில் இருந்து அப்படியே கீழே விழுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ஊழியர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

2 பேர் காயம்
கார் திடீரென கீழே விழுந்ததால் கீழே இருந்த ஒரு கார் இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. காரில் இருந்த பகவத்தும் காயம் அடைந்தார். மேலும் கீழே இருந்த நபர் ஒருவரும் காயம் அடைந்தார். உடனைடியாக அங்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோ வைரல்
இந்த சம்பவம் குறிதது ஷோரும் அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரனண நடத்தி வருகின்றனர். கார் விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. ஆசை, ஆசையாய் புது கார் வாங்க சென்ற நபர் காருடன் வீட்டுக்கு செல்லாமல், பரிதாபாமாக மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் அவரது குடும்பத்தினரிடம் சோகத்தை உண்டாக்கியது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications