Sarath Babu Health Condition: பிரபல நடிகர் சரத்பாபு உடல்நிலை பாதிப்பு .. மருத்துவமனையில் அனுமதி
ஐதராபாத்: தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருக்கும் சரத் பாபு உடல் நலக்குறைவால் ஐதாராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத் பாபு. மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தில் 1971 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் சரத் பாபு நடித்துள்ளார்.

மிகப்பெரும் ஹிட் அடித்த படங்கள் சரத் பாபுவிற்கும் பெரும் புகழை தேடிக்கொடுத்தது. தமிழ், தெலுங்கு மட்டும் இன்றி கன்னடா, இந்தி , மலையாள படங்களிலும் சரத் பாபு நடித்துள்ளார். 90 களில் ரஜினிகாந்த் மற்றும் சீரஞ்சீவியின் உடன் சரத் பாபு நடித்த படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சரத்பாபு நடித்துள்ளார்.
அண்மையில் பாபிசிம்ஹா நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை படத்திலும் சரத் பாபு நடித்துள்ளார். இந்த நிலையில், சரத்பாபு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் உடல் நலம் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது ரசிகர்களும் நலம் விரும்பிகள் மற்றும் திரைத்துறையினர் விரைந்து உடல் நலம் தேற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.
உடல் நலம் தேறியதையடுத்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சரத் பாபுவை குடும்பத்தினர் அனுமத்தினர். ஐதராபாத்தில் உள்ள பிரபல ஏஐஜி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரத் பாபுவிற்கு தீவிர சிகி ச்சை அளிக்கப்பட்டது.
இதில் சரத் பாபுவின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சரத் பாபு விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications