ஒய்எஸ்ஆர் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவுகிறாரா வாரிசு விஜய்யின் அம்மா? லோக்சபா சீட்டும் ரெடியாமே?
ஹைதராபாத்: பிரபல நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் ஜெயசுதா. இவர் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பிறகு இவர் அவர்களுக்கு அம்மா வேடத்திலும் நடித்துள்ளார்.
அண்மையில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாகவும் சரத்குமாருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இவர் திரைத்துறையை போல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். இதைத் தொடர்ந்து அக்கட்சியிலிருந்து அவர் 2016 இல் விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பிறகு 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
மேலும் ஆந்திர மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டியை சந்தித்தும் ஜெயசுதா பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என தெரிகிறது. இதுகுறித்து ஜெயசுதா கூறுகையில் பாஜகவில் இணையுமாறு கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் எனக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
அவ்வாறு இணைந்தால் அக்கட்சியில் எனது பங்கு குறித்து விவாதித்துள்ளேன். இதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எதுவாக இருந்தாலும் மீடியாவிடம் சொல்லிவிட்டுதான் செய்வேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் செகந்திராபாத் எம்பி தொகுதியில் போட்டியிட ஜெயசுதா வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது.
அதற்கு பாஜக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர் விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜெயசுதாவை பாஜக தலைவரான தெலுங்கானாவின் ஈட்டலா ராஜேந்தர் பாஜகவில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவருடன் கோமாட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டியும் அழைக்கப்பட்டார். அவர் பாஜகவில் இணைந்து தற்போது கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications