நைட் பப்பில் தப்பா நடந்துக்கிட்டார்.. மாடியிலிருந்து தள்ளவும் பார்த்தார்.. நடிகை பரபர புகார்
பாஜக பிரமுகர் மகன் மீது நடிகை சஞ்சனா பாலியல் புகார் தந்துள்ளார்
ஹைதராபாத்: "நைட் கிளப் பப்பில் என்கிட்ட ஆஷிஷ் தவறாக நடந்துக்கிட்டார்.. பாலியல் தொல்லை தந்தார்.. அப்பறம் என்னை மாடியில் இருந்து கீழே தள்ள பார்த்தார்" என்று நடிகை சஞ்சனா பாஜக பிரமுகர் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை வைத்துள்ளார்.
தெலுங்கில் பிரபல நடிகை சஞ்சனா.. இவருக்கு 27 வயதாகிறது.. மாடல் அழகியும் கூட. இவர், தெலுங்கு பிக்பாஸ் 2-வது சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றவர்.
இந்நிலையில், இவர் ஹைதராபாத் மந்தாப்பூரில் உள்ள நோவோடெல் என்ற ஹோட்டல் ஒன்றுக்கு இரவில் கிளம்பி சென்றுள்ளார்.

பாலியல் தொல்லை
அப்போது இதே நைட் கிளப் பப்புக்கு தெலங்கானா முன்னாள் எம்எல்ஏவும், பாஜக இளைஞரணியை சேர்ந்தவருமான நந்தேஷ்வர் கவுடுவின் மகன் ஆஷிஷ் கவுடு என்பவரும் வந்திருக்கிறார். அங்கு அவர் சஞ்சனாவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஹோட்டல்
இது சம்பந்தமாக சஞ்சனா மந்தாப்பூர் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதில், "நான் என் தோழியுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றேன்.. அப்போது ஆஷிஷ் கவுடு குடிபோதையில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.. பிறகு அவர் என்னையும், மற்றவர்களையும் தாக்கினார். தாக்கியதோடு மட்டும் அல்லாமல் முதல் மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிட பார்த்தார்.

சிசிடிவி கேமிரா
மது பாட்டிலால் என்னை அடிக்க வந்தார். இதை எதிர்த்து தடுக்க வந்தவர்களிடமும் அவர் மோசமாக நடந்து கொண்டார். இதை அங்கிருந்த பவுன்சர்கள் வேடிக்கை பார்த்து கொண்டே நின்றனர். ஆசிஷின் நடவடிக்கையை பார்த்து பயந்து போய், நானும் என் ஃபிரண்டும் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டோம். இந்த செயலுக்கு அந்த பப்பில் இருக்கும் சிசிடிவி கேமரா தான் சாட்சி. அதில் பதிவானதை பார்த்துவிட்டு, ஆசிஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டுள்ளார்.

அரசியல் சதி
சஞ்சனாவின் அளித்த இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆசிஷ் தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது. எனினும், இந்த குற்றச்சாட்டை ஆசிஷ் கவுட் முழுவதுமாக மறுத்துள்ளார். "இது ஒரு அப்பட்டமான அரசியல் சதி... என் இமேஜை கெடுக்க சஞ்சனாவை பயன்படுத்தி இருக்கிறார்கள்.. இந்த புகாரில் துளியும் உண்மை இல்லை.. இந்த பொய் வழக்கிற்கு பயப்பட மாட்டேன்" என்றார்.

பரபரப்பு
பாஜக பிரமுகரின் மகன் மீது நடிகையின் இந்த பாலியல் குற்றச்சாட்டு மிகப்பெரிய அதிர்வலையை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தி வருகிறது. புகாருக்கு உள்ளான இதே ஆஷிஷ்தான் ஹைதராபாத்தில் 2 நாளைக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications