ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலை நேரத்தில் வேலை மட்டும்தான்.. செல்போனுக்கு நோ.. மின் நிறுவன ஊழியர்களுக்கு உத்தரவு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இனி வேலை நேரத்தில் வேலை மட்டும்தான் செய்யவேண்டும் என்ற நோக்கில் ஊழியர்கள் செல்போனை பயன்படுத்த தடை விதித்து ஆந்திர அரசுக்கு சொந்தமான CPDCL நிறுவனம் ஊழியர்களுக்கு கெடுபிடி காட்டியுள்ளது.

அரசு நிறுவனங்களில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவையாகும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இப்போதெல்லாம் செல்போன் இல்லாத நபர்களை பார்ப்பதே அரிது. கையின் ஆறாம் விரலை போல அனைவரும் செல்போனும் கையுமாக அலைவதை சர்வ சதாரணமாக காண முடியும். காலையில் தூங்கி முழிப்பதும் செல்போன் தான்.. இரவு உறங்கும் முன் கடைசியாக பார்ப்பதும் செல்போன் தான் என்று சொல்லும் அளவுக்கு அனைவரது வாழ்க்கையிலும் செல்போன் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கி விட்டது.

தப்பு இருக்கு! ஓபிஎஸ் எடுத்த கடைசி பிரம்மாஸ்திரம்.. 3 கோணங்கள்.. இதுமட்டும் நடந்தால் அதிமுகவே மாறும்தப்பு இருக்கு! ஓபிஎஸ் எடுத்த கடைசி பிரம்மாஸ்திரம்.. 3 கோணங்கள்.. இதுமட்டும் நடந்தால் அதிமுகவே மாறும்

 செல்போன் இல்லாமல்

செல்போன் இல்லாமல்

அதுவும் இப்போதுள்ள 2 கே கிட்ஸ்கள் எல்லாம் சொல்லவே வேண்டாம்... பிறந்தது முதல் செல்போனை பார்த்தே வளர்ந்துவிட்ட 2 கே கிட்ஸ்கள் எல்லாம்.. செல்போன் மட்டும் இருந்தால் போதும் வேறு யாரும் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அதில் மூழ்கி கிடக்கின்றனர். இது ஆபத்தான போக்கு என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்காமலும் இல்லை. ஆனாலும் பெரும்பாலான வீட்டில் இதுதான் நடக்கிறது.

அலுவலகத்தில் செல்போன்

அலுவலகத்தில் செல்போன்

சிறியவர்கள்தான் இப்படி என்றால் பெரியவர்கள் இவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு செல்போன்களை பயன்படுத்துகின்றனர். பயண நேரம் தொடங்கி அலுவலகத்திலும் செல்போன் பயன்படுத்தும் போக்கு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. தனியார் அலுவலகங்களில் கூட இந்த நிலைமை இருக்கிறதென்றால் அரசு அலுவலகங்களிலும் இதுதான் நடக்கிறது என்று பொதுமக்கள் பரவலாக கூறும் விமர்சனமாக உள்ளது.

பணி நேரத்தில்

பணி நேரத்தில்

அனைத்து ஊழியர்களையும் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாவிட்டாலும் பணி நேரத்தில் செல்போன்களை பயன்படுத்தும் ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில், ஆந்திரா அரசு நிறுவனமான மத்திய மின் விநியோக கார்ப்பரேஷன் லிமிடெட் (CPDCL) நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்

ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்

இது தொடர்பாக சிபிடிசிஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜே பத்மா ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பணி நேரத்தில் செல்போன்களை பயன்படுத்தி வேலை நேரத்தை வீணடிப்பதாகவும் இதனால், அன்றாட வேலை நேரத்தின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ஆம் தேதி இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இதன்படி CPDCL-ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரும் போதே தங்கள் செல்போனை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

பணி நேரத்தில் போன் பேச யாரும் அனுமதி கிடையாது. உணவு இடைவேளை மற்றும் டீ பிரேக்கின் போது செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம். அதேவேளையில் அதிகாரிகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஊழியராவது இந்த விதிகளை பின்பற்ற தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

English summary
Andhra government-owned CPDCL has shown harshness to the employees by banning the use of cell phones by the employees with the intention that they should only do work during the working hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X