தலையில் பூ.. காஸ்ட்லி புடவையுடன் பெண்கள்.. ஒதுக்குப்புறமாக காருக்குள்.. அப்படியே மிரண்டு போன ஆந்திரா
காரில் மது அருந்தும் பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது
ஹைதராபாத்: பட்டுப்புடவை, தலைநிறைய மல்லிகைப்பூ, நெற்றி நிறைய குங்குமத்துடன் குடும்ப பெண்கள் ஜொலி ஜொலிக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் கையில் இருப்பதை பார்த்துதான் பொதுமக்கள் அப்படியே ஷாக் ஆகி உட்கார்ந்துள்ளனர்..!
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. ஆந்திர பிரதேசத்தில் நடந்த சம்பவம் இது.. ஒரு பெரிய கார் நிற்கிறது.. அந்த காரில் முன்பக்கம் 3 பெண்கள், பின்பக்க சீட்டில் 4 பெண்கள் உட்கார்ந்துள்ளனர்.
எல்லாரும் பட்டுப்புடவை & காஸ்ட்லி புடவைகள் அணிந்திருக்கிறார்கள்.. பார்க்க பெரிய வீட்டு பெண்கள் போலவும் தெரிகிறார்கள்.. நெற்றி நிறைய பொட்டு வைத்திருக்கிறார்கள்.. ஒருசிலர் தலையில் பூ வைத்துள்ளனர்.

மதுபாட்டில்
அந்த காரின் கதவை 2 பக்கமும் திறந்துவைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.. அவர்கள் கையில் மது பாட்டில் இருக்கிறது.. பாதி பேர் பாட்டிலை கையில் பிடித்து கொண்டு குடிக்கிறார்கள்.. மீதி பேர் சிக்கன், மட்டன் என சைட்-டிஷ்ஷை ஒரு தட்டில் வைத்து சாப்பிடுகிறார்கள்... ஒரு பிச்சைக்காரர் அங்கே வருகிறார்.. அவருக்கு தங்களிடம் இருந்த சைட்டிஷ்ஷை எடுத்து ஒரு பெண் தருகிறார்.

டென்ஷன்
இந்த பெண்களில் ஒருவர் இதை வீடியோ எடுக்கிறார்.. இவர் வீடியோ எடுப்பது தெரிந்தும் அந்த பெண்கள் எந்தவித டென்ஷனோ, பயமோ, சலனமோ இல்லாமல் கேஷூவலாக தண்ணி அடிக்கிறார்கள்.. இதுதான் அந்த வீடியோ... எப்படியோ சோஷியல் மீடியாவிலும் வெளியாகிவிட்டது.. இதை பார்த்துதான் மக்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார்கள்.

விடுமுறை
ஆந்திராவில் விடுமுறை நாளை கொண்டாடி மகிழவே இப்படி ஒருகூத்து அரங்கேறி உள்ளது.. அவரவர் வீட்டில் இருந்து இவர்கள் எல்லாருமே டிரஸ் செய்து கொண்டு காரில் புறப்பட்டு ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்து இப்படி கும்மாளம் அடித்துள்ளனர்.. மது குடிக்க கூடாது என்று தான் நம் நாட்டில் சொல்லப்படுகிறதே தவிர, (அதுவும் பெயரளவில்தான்) பெண்கள் மது குடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை.. அப்படி விதிமுறைகளும் எங்கும் இல்லை.

வீடியோ
ஆனாலும் இவர்களிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஏன் தெரியுமா? போக்குவரத்து விதிகளை இந்த பெண்கள் மீறி விட்டார்களாம்.. மற்றபடி வீடியோ சம்பந்தமாக எதுவும் இல்லை.. ஒருபக்கம் ஆணுக்கு பெண் சளைத்தவர் இல்லை என்பதை இந்த விஷயத்திலும் பெண்கள் நிரூபித்து வருகின்றனர் என்றாலும் மறுபக்கம் மதுவிலக்கு எப்படியும் வந்துவிடும் என்று நாம்தான் நம்பி கொண்டிருக்கிறோம்..!












Click it and Unblock the Notifications