சொன்னோம்ல..நபிகளை இழிவுபடுத்திய தெலுங்கானா ராஜாசிங்-கட்சியில் சேர்த்து வேட்பாளராகவும் அறிவித்த பாஜக!
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜா சிங் எம்.எல்.ஏ. மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக பாஜக அறிவித்துள்ளது. அத்துடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் மீண்டும் கோஷாமஹால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளராகவும் ராஜா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் தொடர்ச்சியாக வெறுப்பு பேச்சு சர்ச்சைகளில் சிக்கியவர் ராஜா சிங் எம்.எல்.ஏ. அத்துடன் நபிகள் நாயகம் குறித்து பேசியதால் ராஜா சிங்குக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அப்போது ராஜா சிங் கைது செய்யப்பட்டார். இருப்பினும் உடனே ஜாமீனில் விடுதலையானார். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், பாஜகவும் ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தது.

தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ராஜாசிங் போட்டியிட்டு வென்ற கோஷா மஹால் தொகுதியில் விக்ரம் கவுட், பாஜக வேட்பாளராக களமிறங்க மும்முரமாக முயற்சிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இதனால் கொந்தளித்து போன ராஜாசிங், பிஆர்எஸ் கட்சியில் சேரக் கூடும் அல்லது தேர்தல் அரசியலைவிட்டே விலகக் கூடும் எனவும் கூறப்பட்டது.
மேலும் ஏற்கனவே நுபுர் சர்மா, ஜிண்டால் போன்றவர்கள் நபிகள் நாயகம் சர்ச்சைகளில் சிக்கியவர்கள்; அவர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதேபோல ராஜா சிங்கையும் மீண்டும் பாஜகவில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன.

இந்நிலையில் தற்போது ராஜா சிங் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிடுவதாக பாஜக மேலிடம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான 53 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இந்த பட்டியலில் ராஜா சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. கோஷாமஹால் தொகுதியிலேயே ராஜா சிங் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications