ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெலுங்கானா எம்எல்ஏக்களை காக்க.. பெங்களூர் ரிசார்ட்டுகளை ரெடி செய்த காங்..!

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கானாவில் குதிரை பேரத்தில் குதித்த காங்கிரஸ்

    ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தல் தங்களுக்கு சாதகமாகாமல் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் வெற்றி பெறும் எம்எல்ஏக்களை ரிசார்ட் ஒன்றில் வைத்து பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால் அங்கு காங்கிரஸ் நிலைமை படு மோசமாகி வருகிறது.

    பெங்களருவில் நவீன வசதிகள் கொண்ட தங்கும் வசதிகள் கொண்ட ரிசார்ட்டையும் தயார் செய்து வைத்துள்ளதாம். தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், தெலுங்கானா பகுதியில் இருந்து வெற்றி பெறும் தமது கட்சி எம்எல்ஏக்கள் டிஆர்எஸ் கட்சிக்கு தாவுவதை தடுக்கவும், குதிரை பேரத்துக்கான முயற்சிகளையும் முறியடிக்கவும் காங்கிரஸ் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு வராது போலவே தெரிகிறது.

     Congress readies Bangalore resorts to save Telangana cong MLAs frombeing poached

    ஆனால், காங்கிரஸ் இது போன்ற குதிரை பேரத்தில் ஈடுபடும் நடவடிக்கைளில் இறங்கி உள்ளதாக டிஆர்எஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. முன்னதாக, நாகர்குர்னல் தொகுதியை சேர்ந்த மாரி ஜனார்த்தன ரெட்டி ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

    அதாவது, 2 நாட்களுக்கு முன்னால் காங்கிரசின் எம்பியான கொண்ட விஸ்வேஸ்வர ரெட்டி தம்மை அணுகி காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறும், அதற்கு வேண்டியதை செய்து தர தயார் என்றும் தமக்கு ஆசை காட்டினார் என்றும் பரபரப்பான புகாரை முன் வைத்துள்ளார்.

    ஆனால் இதை காங்கிரஸ் முழுமையாக மறுத்துள்ளநிலையில் டிஆர்எஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தங்கள் கட்சியினரை அணுகி, பேரம் பேசுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பெங்களுருவில் ரிசார்ட்டுகளை முன்பதிவு செய்து வைத்து, மறைமுக அழைப்பு விடுத்து வருவதாகவும் கூறி வருகிறது.

    தற்போது தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Congress readies Bangalore resorts to save Telangana cong MLAs frombeing poached
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X