நம்ம "கிங்” கோலியா இது? என்ன பொறுமை.. ஆளே மாறிட்டாரே! ஆக்கிரோஷம் டூ அமைதி - ரசிகர்களான ஹேட்டர்கள்
ஐதராபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் இந்தியா வென்று கோப்பையை தட்டிச்சென்ற நிலையில் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் பலரையும் வியக்க செய்து இருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா அடுத்தடுத்த ஆட்டமிழக்க விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் சூர்ய குமார் யாதவ்.

கோலி - சூர்யா ஜோடி
விராட் கோலி விக்கெட்டுகள் விழுவதை கட்டுப்படுத்தி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடினார். இதற்கு ஃபார்ட்னராகவும் ஒரு சீனியர் வீரராகவும் தேவையான ஒத்துழைப்பை கோலி வழங்கி நம்பிக்கை அளித்தார். தனக்கு வந்த பந்துக்களை வீணடிக்காமல் சூர்ய குமார் யாதவுக்கு ஸ்ட்ரைக்கை மாற்றிவிட்டுக் கொண்டிருந்தார் விராட் கோலி.

வெற்றிக்கு வித்திட்ட கோலி
இதனால் சூர்யகுமார் யாதவ் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி அசத்த மறுமுனையில் இருந்த விராட் கோலி சற்று தாமதமாக அரை சதத்தை கடந்தார். சூர்யகுமார் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவை ஆடவிட்டு பொறுமையாக அரைசதம் கடந்தார் கோலி. கடைசி ஓவரில் அதிக ரன்கள் தேவைப்பட்ட அசத்தலான சிக்சரை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

ஆக்கிரோஷ கோலி
விராட் கோலி இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்தே
மைதானத்தில் ஆக்கிரோஷமாக நடந்துகொள்பவர். இதற்காகவே பல்வேறு விமர்சனங்களை அவர் சந்தித்து இருக்கிறார். ஆனாலும், கேப்டனாக பொறுப்பேற்ற பின் சற்று ஆக்கிரோஷத்தை குறைத்துக் கொண்டார். இருந்தாலும் அவ்வப்போவது ஆக்கிரோஷமும் அவசரமும் அவரது ஆட்டத்தில் வெளிப்பட்டே வந்தது.

ஃபார்ம் அவுட்
ஆனால், கடந்த ஆண்டு ஃபார்ம் அவுட் என்ற விமர்சனம் எழுந்த பின் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கோலியை அணியிலிருந்தே நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தான் மன அழுத்தத்தில் இருப்பதை வெளிப்படையாகவே தெரிவித்தார் கோலி. ஆனால், ஆசிய கோப்பையில் தனது ஃபார்மை மீண்டும் நிரூபித்த கோலி அசத்தலான சதத்தை விளாசி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமைதியான கோலி
ஆசிய கோப்பையில் இருந்தே கோலியிடம் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அவரிடம் பழைய ஆக்கிரோஷமும் அவசரமும் இல்லை. அமைதியும் நிதானமும் தெரிகிறது. இதுதான் அவரை தற்போது நிலையான ஆட்டத்தை ஆட வைத்திருக்கிறது. அவரது ஆக்கிரோஷத்தால் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் கூட அவரை தற்போது பாராட்டத் தொடங்கி இருக்கிறார்.
-
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications