அப்பார்ட்மென்ட்டில் இந்த பெண் செய்த காரியத்தை பார்த்தீங்களா..பாத்ரூமில் "அதை" எடுத்து.. இப்படிகூடவா?
பாட்டி கண்களில் ஹார்பிக் ஊற்றி கொள்ளையடித்த பெண் கைதானார்
ஹைதராபாத்: அபார்ட்மென்ட் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்கார பெண் செய்த காரியத்தை பார்த்து, தெலுங்கானா அதிர்ந்துபோயுள்ளது.
ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத்தில் ஒரு அபார்ட்மென்ட்டில் வயதான பாட்டி வசித்து வருகிறார்.. 73 வயதாகிறது.. அவர் பெயர் ஹேமாவதி..
இவரது கணவர் இறந்துவிட்டார்.. சஷிதர் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார்.. அவர் லண்டனில் வேலை பார்த்து வருகிறார்..

வேலைக்கார பெண்
அதனால் அம்மா தனியாக இருப்பதால், அவரை கவனித்து கொள்ள ஒரு பெண்ணை வீட்டோடு வேலைக்கு வைத்தார். அந்த பெண் பெயர் பார்கவி... 30 வயதாகிறது.. ஒரு வருடமாகவே பாட்டி வீட்டில்தான் வேலை செய்து வருகிறார்.. பார்கவிக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. பாட்டி தனியாக இருப்பதால், மகளுடன் வந்து இங்கேயே தங்கிவிட்டார்..

பார்கவி
இந்த நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து பாட்டிக்கு கண்ணில் கோளாறு ஏற்பட ஆரம்பித்தது.. அவரது கண்ணில் அரிப்பு ஏற்பட்டுள்ளது... ஆஸ்பத்திரி போகலாம் என்று பாட்டி சொல்லவும், "அதெல்லாம் வீண் செலவு, நானே சரிசெய்துவிடுவேன்" என்று சொல்லிய பார்கவி, பாத்ரூமில் இருந்து ஹார்பிக்கை எடுத்து வந்து, அதனுடன் தலைவலிக்கு தேய்க்கும் தைலத்தை எடுத்து கலந்துவிட்டார்..

கண் பார்வை
இரண்டையும் மிக்ஸ் செய்து பாட்டி கண்ணில் துளி துளியாக ஊற்றியுள்ளார். ஹார்பிக் தைலம் பட்டதுமே பாட்டிக்கு கண் எரிச்சல் அதிகமாகிவிட்டது.. தினம் தினம் துடித்து வந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே கண் பார்வையும் குறைந்துவிட்டது.. இதை பற்றி லண்டனில் இருக்கும் மகனிடம் பாட்டி சொல்லவும், அவர்பதறி போய், உடனே டாக்டரிடம் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்..

கண் எரிச்சல்
அவரது வற்புறுத்தலின்பேரில், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு பாட்டியை, 7 வயது ஊர்வசிதான் அழைத்து சென்றிருக்கிறாள்.. அங்கு டாக்டர்கள் செக் செய்து பார்த்துவிட்டு, கண்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆனால் காரணம் தெரியவில்லை என்று சொல்லி உள்ளனர்.. இதற்கு அடுத்த சில நாட்களில் கண் பார்வை முற்றிலுமாக பாட்டிக்கு போய்விட்டது.. இதனால், லண்டனில் உள்ள மகன் குழம்பிப்போய், நேரிலேயே வந்துவிட்டார்..

கண் எரிச்சல்
அம்மாவை ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.. அப்போதுதான், பாட்டியின் கண்களில் கெமிக்கல் ஊற்றப்பட்டு, அந்த பாதிப்பால் கண் பார்வை இழந்திருப்பது தெரிய வந்தது... அப்போதுதான், மகனுக்கு பார்கவி மீது சந்தேகம் வலுவானது.. உடனே போலீசிலும் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையில்இறங்கினர்.. பார்கவியிடம் துருவி துருவி கேள்வி கேட்டனர்..

கைது
அப்போதுதான் அந்த வீட்டில் பாட்டியின் பணத்தையும், நகையையும் கொள்ளையடிக்க திட்டம் போட்டு வந்ததாகவும், அதனாலேயே பாட்டிக்கு கண் பார்வையை இழக்க செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தார்... இதற்கு பிறகு வீட்டுக்கு ஓடிப்போய் பீரோவை பார்த்தால், பாட்டியின் 40 ஆயிரம் ரூபாய், 2 தங்க வளையல், ஒரு தங்க செயின் போன்றவை அபேஸ் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.. அத்தனையும் போலீசார் பறிமுதல் செய்து, பார்கவியை ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஹிட்லர் உத்வேகம்... வடக்கிற்கு எதிரான போர்க்கொடி! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சால் புயல் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications