"சிறந்த வாழ்க்கை தரம்.." நாட்டிலேயே இந்த தென்னிந்திய நகரத்திற்கு தான் முதலிடம்.. சென்னை எந்த இடம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சர்வதேச அளவில் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நகரங்கள் பட்டியலை மெர்சர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவில் இருந்து பல நகரங்கள் இடம்பிடித்துள்ளது.

மெர்சர் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வாழ்வதற்கு மிகச் சிறந்த நகரங்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான பட்டியலை மெர்சர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

 Hyderabad ranks as Indias top city for city with best quality of living

இந்த லிஸ்டில் பல்வேறு காரணங்களை ஆய்வு செய்து எந்த நகரம் வாழச் சிறந்த நகரம் என்ற லிஸ்டை மெர்சர் அமைப்பு வெளியிடும். பொதுவாக இந்த லிஸ்டில் ஐரோப்பிய நகரங்களே ஆதிக்கம் செலுத்தும். இந்தாண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

சர்வதேச ரேங்கிங்: இந்தாண்டு சர்வதேச அளவில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா முதலிடத்தில் இருக்கிறது. அதைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்து தலைநகர் சூரிச் 2ஆவது இடத்திலும் கனடாவின் வான்கூவர் 3ஆவது இடத்திலும் இருக்கிறது. இந்த ஆண்டு டாப் 10 நகரங்களில் அதிகபட்சமாக மேற்கு ஐரோப்பாவில் இருந்து ஏழு நகரங்கள் இடம்பிடித்துள்ளது. அதேபோல பசிபிக் பகுதியில் இருந்து இரண்டு நகரங்களும் வட அமெரிக்காவில் இருந்து ஒரு நகரமும் அந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.

இந்த லிஸ்டில் இந்திய அளவில் முதல் இடத்திலும் சர்வதேச அளவில் 153ஆவது இடத்திலும் ஹைதராபாத் இருக்கிறது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற தரவரிசை பட்டியல்களில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்: இது தொடர்பாக ஹைதராபாத் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே டி ராமாராவ் தனது எக்ஸ் பக்கத்தில், "மெர்சர் லிஸ்டில் சிறந்த நகரமாக ஹைதராபாத் இருக்கிறது. 2015ஆம் ஆண்டிலிருந்து 6ஆவது முறையாக ஹைதராபாத் முதலிடத்தில் இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னை எங்கே: இந்த சர்வதேச ரேங்கிங்கில் ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக புனே 154ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், பெங்களூரு 156ஆவது இடத்திலும் சென்னை 161ஆவது இடத்திலும் இருக்கிறது.. அதேபோல மும்பை (164) மற்றும் கொல்கத்தா (170) இடத்தை பிடித்துள்ளன. நமது தேசிய தலைநகரான டெல்லி சவுதி அரேபியாவில் ரியாத்துடன் 172ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

மெர்சர் என்ற இந்த அமைப்பு கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக-கலாச்சார சூழல் போன்ற பல்வேறு காரணங்களை வைத்து வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு ரேங்கிங்கில் ஐந்து கண்டங்களில் இருந்து 241 நகரங்கள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

அதேபோல வாழ அதிக செலவாகும் நகரங்கள் லிஸ்டில் மும்பை 127வது இடத்தில் இருக்கிறது. அதாவது இந்தியாவில் அதிகம் செலவாகும் நகரங்கள் லிஸ்டில் மும்பை முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி (155), சென்னை (177), பெங்களூரு (178), ஹைதராபாத் (192) மற்றும் புனே (201) ஆகிய நகரங்கள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+