பரபரத்த மெட்ரோ ரயில் நிலையம்.. மேலிருந்து குதித்த 21 வயது பெண் தற்கொலை.. ஹைதராபாத்தில் ஷாக்!
ஹைதராபாத்: காதல் தோல்வி காரணமாக இளம் பெண் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர். நகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ஷபானா. அவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் மேல் மாடிக்கு சென்றார்.
அவர் அங்கு போனதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் அந்த பெண்ணை பார்த்தனர். மேலிருந்து கீழேயே பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண் ஒரு வித குழப்பத்துடன் இருந்ததும் தெரியவந்தது.

விபரீதம்
ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அந்த பெண்ணை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். அப்போது ஒரு டிராக்கில் மெட்ரோ ரயிலும் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் கடந்து சென்றது. கீழேயும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

தடுக்க முயற்சி
அந்த பெண்ணை தடுத்து நிறுத்த ஏராளமானோர் முயன்றனர். பலர் அந்த பெண் கீழே விழுவதை பார்க்க செல்போனில் வீடியோ எடுக்கும் மோசமான செயலில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அந்த பெண் தன்னை யாரும் காப்பாற்ற அருகே வருவதற்குள் கீழே குதித்தார்.

சமூகவலைதளங்கள்
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். பின்னர் காந்தி மருத்துவமனைக்கு அந்த பெண் அழைத்து செல்லப்பட்டார். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பெண் பலி
அங்கு அந்த பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் யாரையோ காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஷபானா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications