தாண்டியா ஆட்டமும் ஆட.. பாஜக கூட்டமும் கூட! களைகட்டிய செயற்குழு! நம்ம குஷ்புதான்.. என்னமா ஆடுறாங்க!
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதில் கலந்து கொண்டுள்ள நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு உற்சாகமாக நடனமாடிய வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், அடுத்த ஆண்டில் கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இம்மாநில தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பது ,முதல்வர் வேட்பாளர், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூடிய கூட்டணி யூகங்களை உடைப்பது தொடர்பாக இதில் விவாதிக்கப்பதற்காக பாஜக செயற்குழு கூடியுள்ளது

பாஜக செயற்குழு
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுவின் இரண்டுநாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், இதில், பிரதமர் மோடி, கட்சித் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 340 பேர் பங்கேற்றுள்ளனர்.

தீவிர ஆலோசனை
தென்மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. செகந்திரபாதில் பிரதமர் மோடியின் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்துடன் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நாளை நிறைவு பெறும். மிஷன் சவுத் என்ற பெயரில் தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.

தீவிர ஏற்பாடுகள்
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நடன கலைஞர்கள், இசை கலைஞர்கள் ஹைதராபாத்தில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் செயற்குழு கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் களைகட்டியுள்ளது. இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குஷ்பு நடனம்
முன்னதாக ஹைதராபாத் செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த அவரை பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் முன் நடனமாடிக் கொண்டிருந்த தாண்டியா கலைஞர்கள் குஷ்பூவை தங்களுடன் ஆடுமாறு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து குஷ்பூ நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications