Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறந்தநாள் அதுவுமா.. “மோடி” படத்துக்கு மாலையுடன் படையல் - “காவி குர்தா” செய்த செயல் -டிஆர்எஸ் கேள்வி

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து ஒரு நபர் மரியாதை செலுத்தும் வீடியோவை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த நிர்வாகி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாள் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை 15 நாட்களும் பாஜக கொண்டாடுகிறது.

நாடெங்கும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபடுகின்றனர். அத்துடன் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நமோ ஆப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

குவிந்த வாழ்த்து

குவிந்த வாழ்த்து

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் சினிமா, விளையாட்டு பிரபலங்களும் மோடியை வாழ்த்தினர்.

சிறுத்தைகள்

சிறுத்தைகள்

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான நேற்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் சென்றார். அங்கு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் அழிந்து வரும் நிலையில் அந்த இனத்தை சேர்ந்த சிறுத்தைகளை மோடி திறந்துவிட்டார்.

டிஆர்எஸ் பிரமுகர்

டிஆர்எஸ் பிரமுகர்

இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவர் ஒய்.சதீஷ் ரெட்டி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் "இங்கு என்ன நடக்கிறது?" என்று அவர் கேட்டுள்ளார்.

மோடி படம்

மோடி படம்

அந்த வீடியோ ஏதோ பள்ளி ஒன்றில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், சீருடைய அணிந்த பள்ளி மாணவர்கள் வரிசையாக நிற்க, அவர்கள் எதிரே நாற்காலியில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிரே பூரி, சென்னா, சட்னி ஆகிய உணவுகள் படையல் செய்யப்பட்டு உள்ளது. அங்கு வைக்கப்பட்டு உள்ள மோடியின் புகைப்படத்துக்கு மாலை போடுகிறார். இதை கண்டு அங்குள்ள மாணவர்கள் கைதட்டுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+