எனக்கு சீட் இல்லையா? 'அம்பேத்கர்' சிலை முன் "தொப்பென" விழுந்து புரண்டு கதறி அழுத மாஜி துணை முதல்வர்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட தமக்கு சீட் மறுக்கப்பட்டதால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் தட்டிகொண்டா ராஜையா தரையில் மண்டியிட்டு கதறி அழுத வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக, தெலுங்குதேசம், ஓவைசியின் மஜ்ஸ்லிஸ் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தெலுங்கானாவின் ஆளும் பிஆர்எஸ் கட்சி மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 இடங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கு மட்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த பட்டியலில் 7 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.
பிஆர்எஸ் கட்சியில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் இப்போதே காங்கிரஸ் கட்சி அலுவலகம் சென்று சீட் கேட்டு மனு கொடுத்து வருகின்றனர். பிஆர்எஸ் கட்சியில் சீட் மறுக்கப்ப்ட்டவர்களில் முன்னாள் துணை முதல்வர் தட்டிகொண்டா ராஜையாவும் ஒருவர். இவர் மீது பல்வேறு புகார்கள் வரிசை கட்டி வந்ததால் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்வர் சந்திரசேகராவ் தலைமையை ஏற்று பிஆர்எஸ் கட்சியில் இணைந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஒரு முறை துணை முதல்வராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சீட் மறுக்கப்பட்ட நிலையில் தமது தொகுதியான ஸ்டேஷன் கான்பூருக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார் தட்டிகொண்டா ராஜைய்யா. அப்போது திடீரென அம்பேத்கர் சிலை முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தரையில் புரண்டு பின்னர் மண்டியிட்டு கண்ணீர் விட்டு தமக்கு சீட் கிடைக்காமல் போய்விட்டதே என அழுது புலம்பினார் தட்டிகொண்ட ராஜைய்யா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
#WATCH | Jangaon, Telangana: Bharat Rashtra Samithi (BRS) leader Thatikonda Rajaiah, broke down reportedly after being denied a ticket from Station Ghanpur constituency for the upcoming Assembly elections. (22.08)
— ANI (@ANI) August 23, 2023
(Viral video) pic.twitter.com/4KXtqG15LT
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications