தெலுங்கானா பரபரப்பு-பாஜகவுக்கு ஓடிப்போன மாஜி எம்எல்ஏ கோமதிரெட்டி மீண்டும் காங்கிரஸுக்கு ரிட்டர்ன்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி அக்கட்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸில் இணையப் போவதாக கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். தெலுங்கானா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக இடையே போட்டி உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் என்றும் தொங்கு சட்டசபை உருவாகக் கூடும் எனவும் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிற மாநிலங்களைப் போலவே தெலுங்கானாவிலும் கட்சி தாவல்கள் சரமாரியாக நடைபெற்று வருகின்றன.
இந்த பட்டியலில் இப்போது இணைந்திருப்பவர் கோமதிரெட்டி ராஜகோபால ரெட்டி. காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் முனுகோடு தொகுதியில் 2018-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் கோமதிரெட்டி ராஜகோபால ரெட்டி. ஆனால் திடீரென காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்து அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தமது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் முனுகோடு தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராகவும் கோமதிரெட்டி ராஜகோபால ரெட்டி போட்டியிட்டார். ஆனால் பிஆர்எஸ் வேட்பாளர் குசுகுந்த ரெட்டியிடம் அவர் தோல்வியைத் தழுவினார். கடந்த ஆண்டு நடைபெற்ற முனுகோடு இடைத்தேர்தல் நாடு தழுவிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாஜகவால் முனுகோடு தொகுதியில் கால் பதிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகுவது என முடிவெடுத்து அறிவித்துவிட்டார் கோமதிரெட்டி ராஜகோபால ரெட்டி. அத்துடன் தாம் காங்கிரஸிலேயே மீண்டும் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோமதிரெட்டி ராஜகோபால ரெட்டி கூறுகையில், ஆமாம்.. காங்கிரஸில் மீண்டும் இணைய முடிவெடுத்துவிட்டேன். முனுகோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தேன். இந்த தேர்தலில் மக்கள் மனநிலை என்பது காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சியை காங்கிரஸ் வீழ்த்தும். இதன் காரணமாகவே காங்கிரஸில் மீண்டும் இணைய திட்டமிட்டுள்ளேன். முன்னதாக தெலுங்கானா சட்டசபைக்கான பாஜக அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் கோமதிரெட்டி ராஜகோபால ரெட்டி இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications