பரமா! தோல்வி பயத்தை காட்டுதே காங்..முஸ்லிம் இளைஞர்களுக்கு ஸ்பெஷல் ஐடி பார்க்- அடித்துவிடும் கேசிஆர்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி
3-வது முறையாக ஆட்சி அமைத்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு சிறப்பு ஐடி பார்க் அமைக்கப்படும் என முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்படும்.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தீவிரம் காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி, பிஆர்எஸ் கட்சிக்கு பெரும் சவாலாக களத்தில் நிற்கிறது. பாஜகவும் கணிசமான இடங்களைக் கைப்பற்றுவதில் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும் எனவும் தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், உதவித் தொகை என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்றன. இதற்கு போட்டியாக பிஆர்எஸ், பாஜக கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை வீசிக் கொண்டிருக்கின்றன.
தற்போது, யாரும் எதிர்பார்க்காத ஒரு வாக்குறுதியை தோல்வியின் விளிம்பில் இருப்பதாக சொல்லப்படும் ஆளும் பிஆர்எஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. மாகேஸ்வரம் சட்டசபை தொகுதியில் கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்த முதல்வர் சந்திரசேகர ராவ், பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு சிறப்பு ஐடி பார்க் தனியே உருவாக்கப்படும் என அறிவித்தார். மேலும் இந்துக்களும் முஸ்லிம்களும் தமது இரு கண்கள் எனவும் கேசிஆர் தெரிவித்தார், அத்துடன் சிறுபான்மையினருக்கு ஆளும் பிஆர்எஸ் அரசு வழங்கி வரும் திட்டங்களையும் கேசிஆர் பட்டியலிட்டார்.
தெலுங்கானாவில் முஸ்லிம் வாக்குகள் இந்த முறை காங்கிரஸுக்கு மொத்தமாக போகக் கூடும் என்கிற ஆரூடங்கள் முன்வைக்கப்படுகின்றன. தெலுங்கானா முஸ்லிம்கள் கூட்டமைப்பும் பகிரங்கமாக காங்கிரஸை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்தே முஸ்லிம்களை இலக்கு வைத்து வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் கேசிஆர் எனவும் கூறப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications