ஆத்தாடி.. மகனை விட மருமகள் செம.. இது கேசிஆர் வீட்டு சமாச்சாரம்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மருமகளுக்கு அவரது மகனை காட்டிலும் அதிக சொத்து இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபைக்கு வரும் டிசம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் மாநில முதல்வரும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தன் குடும்பச் சொத்து விவரங்களை பட்டியலிட்டுள்ளார்.

தனது மகனும் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே டி ராமா ராவுக்கு ரூ. 4.93 கோடி சொத்து உள்ளதாக கேசிஆர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் ராமாராவின் மனைவியும் தனது மருமகளுமான ஷைலிமாவுக்கு ரூ. 35.98 கோடி சொத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்துக்கே முதல்வராக உள்ள சந்திரகேகர ராவிடம் சொந்தமாக ஒரு ஓட்ட அம்பாசிடர் கார் கூட இல்லை என வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளார். மேலும் தான் ஒரு விவசாயி என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள வேட்புமனுவை பார்க்கும் போது கேசிஆரின் மகனை காட்டிலும் அவரது மருமகளுக்கு 8 மடங்கு சொத்து அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனுக்கு அதிக சொத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications