"குழந்தைகளை பார்த்துக்கோங்க.." உறவினர் வீட்டில் விட்டுவிட்டு கணவன்-மனைவி எடுத்த விபரீத முடிவு! சோகம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது இரண்டு குழந்தைகளையும் உறவினர் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டு அந்த தம்பதி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நேரங்களில் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும்போது நாம் யாரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாமல் விபரீத முடிவுகளை நாம் எடுக்கும் ஆபத்து இருக்கவே செய்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Telangana police crime

குழந்தைகள்

தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 30 வயதான ஷேசலா மேகனா மற்றும் அவரது கணவர் ஷேசலா நரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தம்பதிக்கு அயுன்ஷ் மற்றும் மிதுன் என்ற இரண்டு இளம் குழந்தைகள் உள்ளனர். செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தம்பதி இருவரும் தங்களது குழந்தைகளை உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டுச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் பத்திரமாக இருப்பதை உறுதி செய்த பிறகு, இருவரும் தங்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர். பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, அந்த தம்பதிக்கு சில காலமாகவே நிதி ரீதியான சிக்கல் இருந்துள்ளது. மேலும், வேறு சில கருத்துவேறுபாடுகளும் இருந்தாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அந்த தம்பதி இந்த மோசமான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்கொலை கடிதத்திலும் கூட பண பிரச்சனைகள், உடல்நலம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம்

நரேஷ் மின்சார துறையில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி மேகனா இல்லத்தரசியாக இருந்தார். நரேஷுக்கு சில காலமாக உடல்நல பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீசாரிடம் அவரது தாய்மாமா மோகன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவன், மனைவி இடையே எந்தவிதமான குடும்பத் தகராறும் இருந்ததாக தங்களுக்கு தெரியாது என்று குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இருவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை இருந்தது போலவும் தெரியவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தம்பதியினரின் மரணத்துக்கு உண்மையில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக் கடிதம் உள்ளிட்ட வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து வரும் போலீசார், தம்பதியினர் இந்த முடிவை எடுக்க வேறு எதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+