நாடு முழுக்க விலைவாசி உயருது! இந்த மாநிலத்தில் மட்டும் விலைவாசி சரியுது! ஆனா இது நல்லது இல்லையாம்
ஹைதராபாத்: இப்போது நமது நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் விலைவாசி அதிகரிப்பதால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எல்லா மாநிலங்களும் போராடி வருகிறது. ஆனால், நாட்டில் இந்த ஒரு மாநிலத்தில் மட்டுமே பணவீக்கம் நெகடிவ்வில் இருக்கிறது. இதனால் விலைவாசி குறையும் போதிலும், அது கெட்ட செய்தி என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அது எந்த மாநிலம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் விலைவாசி உயர்வு தான் மக்களை அதிகம் பாதிக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த எல்லா மாநிலங்களும் போராடி வருகிறது. பணத்தின் மதிப்பு குறைவது, அதாவது பணவீக்கம் காரணமாக விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவே பல மாநில அரசுகளும் போராடி வருகிறது.

நாட்டின் பணவீக்கம்
இதற்கிடையே மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் ஒரு முக்கியமான டேட்டாவை வெளியிட்டு இருந்தது. அதில் கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு ஜூன் மாதம் பணவீக்கம் எப்படி இருந்தது என்பது விளக்கப்பட்டு இருந்தது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் பணவீக்கம் நெகடிவ்வில் இருக்கிறதாம். அதாவது அங்குக் கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூன் மாதம் பணவீக்கம் -0.93 சதவீதம் குறைந்துள்ளது.
தெலுங்கானா பணவீக்கம்
இதன் மூலம் நாட்டிலேயே நெகடிவ் பணவீக்கத்தைப் பதிவு செய்த ஒரே பெரிய மாநிலமாக தெலங்கானா இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாகவே தெலுங்கானாவில் தான் நாட்டிலேயே குறைந்த பணவீக்கம் பதிவாகி இருந்தது. இந்தச் சூழலில் இப்போது அங்கு நெகடிவ்வாக பணவீக்கம் போக ஆரம்பித்துள்ளது. இதனால் விலைவாசியும் குறையத் தொடங்கியுள்ளது. இதை ஆங்கிலத்தில் 'deflation' என்று குறிப்பிடுவார்கள்.
இப்போது நாட்டின் தேசிய சராசரி பணவீக்கம் 2.1 சதவீதமாக இருக்கும் நிலையில், தெலுங்கானாவில் இது நெகடிவ்வாக இருக்கிறது. தெலங்கானாவின் கிராமப்புறப் பணவீக்கம் -1.54 சதவீதமாக இருக்கிறது.. இது தேசியக் கிராமப்புறச் சராசரியான 1.72 சதவீதத்துடன் ஒப்பிடும்போது குறைவு. அதேபோல தெலுங்கானாவில் நகரப்புறப் பணவீக்கம் -0.45 சதவீதமாக இருக்கிறது. இது தேசிய நகரப்புற விகிதமான 2.56 சதவீதத்தை விடக் குறைவு.
ஆந்திரப் பிரதேசம்
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஜூன் மாதம் பணவீக்கம் ஜீரோவாக இருக்கிறது. ஆந்திராவின் கிராமப்புறப் பணவீக்கம் -0.55 சதவீதமாகவும், நகரப்புறப் பணவீக்கம் 1.06 சதவீதமாகவும் உள்ளது. இதன் மூலம் சராசரி பணவீக்கம் ஜீரோவாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தெலுங்கு மாநிலங்களில் நிலைமை அதற்கு நேர் எதிராகவே இருக்கிறது.
குறிப்பாக தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சியில் 2020 முதல் 2023 வரை பணவீக்கம் இரட்டை இலக்கில் இருந்தது. அப்போது பணவீக்கம் பெரும்பாலும் 10 சதவீதத்தைத் தாண்டியே இருந்தது. ஆனால், காங்கிரஸ் அரசு டிசம்பர் 2023ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பணவீக்கம் படிப்படியாகக் குறைந்தது. பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், எல்பிஜி சிலிண்டர்கள் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாகவே இது சாத்தியமாகியுள்ளதாகக் காங்கிரஸ் தரப்பினர் கூறுகிறார்கள்.
நல்லது இல்லையாம்
விலைவாசி குறைகிறது என்றால நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள்! பொருளாதாரம் தொடர்ச்சியாக வளர்ச்சி அடையே சிறிய பணவீக்கம் இருக்க வேண்டும். அதாவது பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது நல்லது. ஆனால், deflation என்பது பொருளாதாரம் சுருங்குவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. நுகர்வோர் தேவை குறைவது, முதலீடுகள் சரிவு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தேக்கம் ஆகியவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
இது பல்வேறு வகையில் பொருளாதாரத்தைப் பாதிக்கும். சில்லறை விற்பனை முதல் விவசாயம் வரை, வாங்கும் சக்தி குறைவாக இருப்பதால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும். விலை குறைவதால் ஜிஎஸ்டி வசூல் குறையும். இது நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் மாநில அரசின் திறனைப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications