ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விஜயசாந்தி - ஏதாவது கிடைக்குமா!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி. பா.ஜ.கவில் இணைந்துள்ள விஜயசாந்தி, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்திக்கவுள்ளார்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் நடிகை விஜயசாந்தி. அவருக்கு பாஜகவின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பாஜகவில் இணைந்த விஜயசாந்திக்கு முக்கியமான பொறுப்பு தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமாநிலங்களில் வலுவாக உள்ள பா.ஜ.க தென் மாநிலங்களில் தன்னுடைய பலத்தை அதிகரிக்க சினிமா பிரபலங்களை கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தெலுங்கானாவில் இருந்து நேற்று இரவு டெல்லி சென்ற விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் சற்று முன் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் அவருக்கு பாஜகவின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

Vijayashanti left the Congress party and joined the BJP

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வரும் நடிகை விஜயசாந்தியின் வரவு பாஜகவுக்கு கூடுதல் பலம் தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் திரையுலகில் நடித்து வந்த விஜயசாந்தி, தெலுங்கு திரை உலகில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். அவர் நடித்த பூ ஒன்று புயலானது, வைஜெயந்தி ஐபிஎஸ் படங்கள் சூப்பர் ஹிட் ஆக ஓடின.பல படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியுடன் அவர் நடித்த மன்னன் படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

சினிமாவில் பிரபலமாக இருந்த போதே அரசியலில் நுழைந்த விஜயசாந்தி தெலுங்கானாவின் வளர்ச்சிக்காக போராடப்போவதாக கூறி 'தல்லி தெலங்கானா' என்னும் தனிக்கட்சியை தொடங்கினார். அதன்பின் அதை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து பாஜகவிலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தார்.

அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் டிஆர் எஸ் கட்சியிலிருந்து விஜயசாந்தி விலகினார்.அதன்பின் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார குழு தலைவராக செயல்பட்ட விஜயசாந்தி, சமீபத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து 2 முறை பேச்சு வார்த்தை நடத்தினார்.

நாளை பாரத் பந்த்- நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்நாளை பாரத் பந்த்- நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தநிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார் விஜயசாந்தி. இந்தநிலையில் இன்று டெல்லி சென்று பா.ஜ.கவில் இணைந்தார் விஜயசாந்தி. பா.ஜ.கவில் இணைந்துள்ள விஜயசாந்தி, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்திக்கவுள்ளார். அதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விஜயசாந்தி சந்திக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

வடமாநிலங்களில் வலுவாக உள்ள பா.ஜ.க தென் மாநிலங்களில் தன்னுடைய பலத்தை கூட்ட தீவிர முயற்சி செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக சினிமா பிரபலங்களை தங்களுடைய கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது விஜயசாந்தியும் அக்கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Vijayasanti has left the Congress party and joined the BJP. He was given a BJP membership card. It has been reported that Vijayashanti, who has joined the BJP, has important responsibilities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X