ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரெக்ட்டா தாலி கட்டும்போது.. மயங்கிய கல்யாண பெண்.. மாப்பிள்ளைக்கு வந்த டென்ஷன்.. ஒரே கதறல்

: மணமகள் முகூர்த்த நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: முகூர்த்த நேரத்தில் மணமகள் மயங்கி விழுந்ததால், கல்யாண மண்டபமே பதறிப்போய் விட்டது..!

எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது கடைசி நேரத்தில் வெடித்துவிடும்.

6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன? 6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?

இதனால் மணமேடை வரை வந்து நின்று திருமணங்கள் நின்றிருக்கின்றன.. அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் திருமணங்களும் நடந்துவிடுவதும் நிகழ்வுகளும் உண்டு.

 கல்யாண பெண்

கல்யாண பெண்

மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது , உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் நம் நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன.. கடந்த சில தினங்களுக்கு முன்பு உபியில், காதலிக்கு திருமணம் என்றதுமே, மணமேடையிலேயே அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூரமும் நடந்தது.. அவ்வளவு ஏன், 3 நாட்களுக்கு முன்பு, 3 பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடந்தது.. முகூர்த்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிட்டதால், மணப்பெண்கள் மாறிவிட்ட கூத்தும் நடந்தது.

 மாப்பிள்ளை

மாப்பிள்ளை

இப்போதும் ஒரு சோக சம்பவம், ஆந்திராவில் நடந்துள்ளது.. ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி ஈஸ்வர ராவ் - அனுராதா. இவர்களது மகள் சுஜானா.. 22 வயதாகிறது.. விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி என்ற இளைஞருக்கு திருமணம் பேசி முடித்தனர்.. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இவர்களுக்கு ரிசப்ஷன் ஏற்பாடானது.. மங்கள வாத்தியங்கள் இசைக்க மணமக்கள் குதிரை வண்டியில் வந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.. மற்றொரு பக்கம் பாட்டுக்கச்சேரி களைகட்டியது..

 டிரஸ்ஸிங்

டிரஸ்ஸிங்

இரவு 10 மணிக்கு முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்தது.. மணமக்கள் புது டிரஸ்ஸில் அலங்காரம் செய்யப்பட்டு, மணமேடையில் உட்கார வைக்கப்பட்டனர்... புரோகிதர் யாகம் வளர்த்து மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தார்.. தாலி கட்டும் நேரம் நெருங்கியது.. ஆனால், தாலி கட்டுவதற்கு முன்பாக சீரகம் கலந்த வெல்லத்தை மணமகன் மணமகளின் தலையில் வைப்பது ஐதீகம்.. எனவே, சீரகம் கலந்த வெல்லத்தை, சுஜானா தலையில் மணமகன் வைத்தார்...

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அப்போது மணமகள் திடீரென மணமேடையில் மயங்கி சரிந்து விழுந்தார்.. இதை பார்த்து மாப்பிள்ளை உட்பட பெண்ணின் குடும்பத்தினர் அனைவருமே பதறி விட்டனர்.. மணமகளை மீட்டு அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.. ஆனால், டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, கல்யாண பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள்.. மணக்கோலத்தில் சடலமாக விழுந்து கிடந்த பெண்ணை பார்த்து, பெற்றோர்கள் கதறி கதறி அழுதது நெஞ்சை நிலைகுலைய வைத்துவிட்டது..

 மணமகள் ரூம்

மணமகள் ரூம்

தகவலறிந்த விசாகப்பட்டினம் போலீசார் விரைந்த வந்து, சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, மண்டபத்தில் இருந்த மணமகள் அறைக்கு வந்து சோதனை நடத்தினர்.. அப்போது அந்த ரூமில், சுஜானா ஹேண்ட்பேக்கில் விஷத்தன்மை கொண்ட காய்கள் இருந்தன.. அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்..

 தாலி கட்டும் நேரத்தில்..

தாலி கட்டும் நேரத்தில்..

ஒருவேளை விருப்பமில்லாமல் இந்த திருமணத்துக்கு சுஜானா கட்டாயப்படுத்தப்பட்டாரா? காதல் தோல்வியா? வேறு ஏதேனும் பிரச்சனையா? என்று தெரியாமல் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறாரகள்.. இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை.. வந்தால்தான், சுஜானா மரணத்துக்கு காரணம் தெரியவரும்.. ஆனாலும் தாலி கட்டும் நேரத்தில், மணப்பெண் விழுந்து இறந்தது விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
what happened in hyderabad wedding ceremony actually and police inquiry going on it மணமகள் முகூர்த்த நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X