நபிகள் நாயகம் சர்ச்சை! பாஜக மதவெறியர்களின் தவறுக்கு, இந்தியா ஏன் மன்னிப்பு கேட்கணும்? பாயும் கேடிஆர்
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் கூறிய கருத்து சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையாகி உள்ள நிலையில், தெலங்கானா அமைச்சர் கே டி ராமராவ் பாஜகவைச் சாடியுள்ளார்.
தொடர்ந்து குறிப்பிட்ட மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருபவர் நுபுர் சர்மா. இவர் சமீபத்தில் தனியார் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். நெறியாளரும் இதைக் கண்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் சர்ச்சை
நுபுர் சர்மாவின் கருத்து பெரிய சர்ச்சையானது. உத்தரப் பிரதேசத்தில் இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் திடீரென வன்முறையாக மாறியதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், இந்த கலவரம் தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் கூட எதிரொலிக்கத் தொடங்கியது. கத்தார், குவைத் போன்ற அரேபிய நாடுகள் இந்தியப் பொருட்களைப் புறக்கணித்தன.

மன்னிப்பு
மேலும், அங்குள்ள இந்தியத் தூதர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டன. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி உள்ள நிலையில், இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள தெலங்கானாவின் ஆளும் டிஆர்எஸ் கட்சி பாஜகவைக் கடுமையாகச் சாடி உள்ளது. அம்மாநிலத்தின் அமைச்சர் கே.டி.ராமராவ் பாஜகவைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.

ஏன் மனிப்பு கேட்க வேண்டும்
அமைச்சர் கே.டி.ராமராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி ஜி, பாஜக மதவெறியர்களின் வெறுப்பு பேச்சுகளுக்காக ஒரு நாடாக இந்தியா ஏன் சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? பாஜகதான் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஒரு தேசமாக இந்தியா அல்ல! நாளுக்கு நாள் வெறுப்பைக் கக்கி, பரப்பியதற்காக உங்கள் கட்சியினர் முதலில் இந்தியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
Recommended Video

அதிர்ச்சி
மோடி ஜி, பாஜக எம்பி பிரக்யா சிங் மகாத்மா காந்தியின் படுகொலையைப் பாராட்டிய போதே உங்கள் மௌனம் அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தது. நீங்கள் எதை அனுமதிக்கிறீர்களோ அதையே நீங்கள் விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். மேலிடத்தின் மறைமுகமான ஆதரவுதான் நாட்டில் மதவெறியையும் வெறுப்பையும் தூண்டியது, இது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

மாயாவதி
அவர் மட்டுமின்றி காங்கிரஸ், பிஎஸ்பி உள்ளிட்ட கட்சிகளும் பாஜகவைச் சாடி உள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, "இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டிய எந்தத் தவற்றையும் செய்யவில்லை. பாஜக செய்த தவறுக்கு. நாடு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? பிரதமருக்கு கத்தார் மற்றும் குவைத் தனது ராஜ் தர்மத்தை நினைவுபடுத்துகின்றன. இதைவிட வெட்கக்கேடானது என்ன? பிரதமரே உங்களால் நாட்டிற்கு அவமானம்... எனவே நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" சாடியுள்ளார்.

காங்கிரஸ்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இது குறித்து தனது ட்விட்டரில், "எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த விஷயத்தில் பாஜகவும் தனது நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை சஸ்பெண்ட் செய்வதும், டிஸ்மிஸ் செய்வதும் மட்டும் பலன் தராது, கடுமையான சட்டங்களின் கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும்," என்று ட்வீட் செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications