For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் ஆயுள் ரகசியம் - வெளிக்காட்டிய 115 வயது பெண்மணியின் செல்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: உங்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

ஆனால், நம்முடைய உடலுக்கு "எக்ஸ்பையரி டேட்" செல்களால் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதுதான் அது.

உலகின் மிகவும் வயதான பெண்மணியின் செல்களின் ஆராய்ச்சிதான் இந்த உண்மையை உலகிற்கு அளித்துள்ளது.

115-year-old woman's blood unlocks life's secret

115 வயது பெண்மணி:

1890 ஆம் ஆண்டு பிறந்த ஹெண்ட்ரிக்ஜே வான் ஆண்டேல் சிக்பர் 2005 ஆம் ஆண்டு இறந்தார்.அவருடைய வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு நோயாலும் அவர் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்த மாதிரி சோதனை:

தற்போது அவருடைய ரத்த மாதிரியை சோதித்த போது, அது பல புதிய விசயங்களை உலகிற்கு காட்டியுள்ளது.டச்சு விஞ்ஞானிகள் இதைப்பற்றி கூறியபோது, ஸ்டெம் செல்லானது அதனுடைய முடிவு நிலையை அடைவதைப் பொறுத்துதான் மனிதனின் வாழ்நாள் நிர்ணயிக்கப் படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானிக்கும் செல்கள்:

ஸ்டெம் செல்களின் எண்ணிக்கைதான் மனித வாழ்நாளையும் தீர்மானிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளை அணுக்கள் அழிவு:

ஆண்டேலின் இறப்பின் போது அவருடைய மூன்றில் இரண்டு பங்கு வெள்ளை அணுக்கள் அழிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜோடி அணுக்கள்:

"உண்மையில் ஆண்டேலின் உடலின் ஸ்டெம் செல்கள்தான் அவருடைய நீண்ட ஆயுளுக்கு துணை செய்துள்ளன.அதிலும் ஒரு ஜோடி வெள்ளை அணுக்களின் இடைவெளி மட்டும்தான் அவருக்கு இந்த 115 ஆண்டுகள் ஆயுளை அளித்துள்ளன" என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.

இடைவெளிதான் காரணம்:

மேலும், விஞ்ஞானிகள் செல்களுக்கு இடையிலான அந்த இடைவெளிக்கான காரணத்தை கண்டறிய முயன்று வருகின்றனர்.

English summary
Do you know that our body does have an expiry date set by our cells ability to decide? A blood analysis of the world's oldest woman may have revealed this secret. Born in 1890, Hendrikje van Andel-Schipper died in 2005.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X