தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 15 பேர் பலி.. ஆந்திராவில் சோகம்
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கர்னூல் மாவட்டம் வெல்துர்தி கிராஸ் ரோடு அருகே ஹைதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஒருவர் பைக் ஓட்டி வந்தார்.

எதிர்திசை
இதனால் அந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்து டிரைவர் பேருந்தை திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

15 பேர் பலி
இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விசாரணை
காயமடைந்தவர்களை கர்னூல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 பேர் பலி
தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குண்டக்கல்லில் நடை பெற்ற திருமண நிச்சயதார்த்தம் ஒன்றிற்கு சென்று திரும்பிய போது விபத்து ஏற்பட்டது. இதில் ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 15 பேர் மரணம் அடைந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications