For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் கள்ளத்தனமாக லக்னோ வந்த 18 பேரை மடக்கி பிடித்த போலீஸ்

Google Oneindia Tamil News

இந்தூர்: கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் பதுங்கி மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப் பிரதேசம் சென்ற 18 பேரை மத்திய பிரதேச போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

Recommended Video

    லாரிக்குள் பதுங்கியிருந்த 18 பேர்... போலிஸ் சோதனையில் சிக்கினர்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர்.

    18 people found travelling in the mixer tank of concrete mixer

    இதில் 18 பேர் பதுங்கிய நிலையில் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோ நோக்கி செல்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து 18 பேரையும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை சட்டவிரோதமாக அழைத்து சென்றதற்காக வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பால் வண்டி, குடிநீர் லாரி ஆகியவற்றில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். போலீஸாரும் அவர்களை பிடிப்பதும் வழக்கு பதிவு செய்வதுமாக உள்ளனர். அரசு என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை எப்போதுதான் உணர்வார்களோ!

    English summary
    18 people found travelling in the mixer tank of a concrete mixer truck by police in Indore, Madhya Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X