பெங்களூர் சிறையில் சசிகலாவை நாளை சந்திக்க 3 எம்எல்ஏக்கள் திட்டம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மடிகேரி: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டுகளில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் மூவர், நாளை பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கதமிழ்ச் செல்வன், கதிர்காமு, மாரியப்பன் கென்னடி ஆகியோர் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் கடிதம் அளித்தும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து இவர்கள் சசிகலாவுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 AIADMK MLAs from Dinakaran faction plans to meet Sasikala

நாளை காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நிகழ வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், இச்சந்திப்புக்கு வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
3 AIADMK MLAs from Dinakaran faction plans to meet Sasikala on tomorrow, says sources.
Please Wait while comments are loading...