For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வ. தொடங்கிய ஆட்டம்.. 38 ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் எங்கள் பக்கம்.. பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 38 எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களமிறங்கிய பாஜக வெறும் 77 இடங்களை மட்டும் கைப்பற்றியது. இருந்தும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பாஜக பெற்றது.

அமலாக்க துறை விசாரணையில் திரிணாமுல் அமைச்சர்! நீதிமன்றம் பரபர உத்தரவு.. மம்தாவுக்கு பெரும் தலைவலிஅமலாக்க துறை விசாரணையில் திரிணாமுல் அமைச்சர்! நீதிமன்றம் பரபர உத்தரவு.. மம்தாவுக்கு பெரும் தலைவலி

பாஜக நிலவரம்

பாஜக நிலவரம்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பின், மேற்கு வங்க பாஜகவில் உட்பூசல் தொடங்கியது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, எம்பி அர்ஜூன் சிங், முகுல் ராய் உட்பட உட்பட 5 பேர் எம்எல்ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சென்றனர். இதனைத்தொடர்ந்து பாஜக மூத்த நிர்வாகிகள் மேற்கும் வங்கத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

பாஜக கூட்டம்

பாஜக கூட்டம்

அதேபோல் மேற்கு வங்க பாஜக தரப்பில் நடிகரும், முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினருமான மிது சக்ரவர்த்தி முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் அம்மாநில பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.

 ஆலோசனை

ஆலோசனை

இந்த ஆலோசனை கூட்டத்தில், மேற்கு வங்கத்தில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலம் ஏற்படுத்த வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. அதேபோல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாளை பேரணி நடக்கவுள்ளது. அதேபோல் பார்த்தா சட்டர்ஜி தொடர்பான செயல்பாடுகளில் தீவிரம் காட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து மேற்கு வங்க பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 38 எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதில் 21 பேர் நேரடியாக பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பாஜக தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

English summary
BJP leader Mithun Chakraborty has claimed that the BJP is in touch with and they have "very good relations" with the opposition party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X