For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் ஆட்சி முறிவு.. பிடிபி - பாஜக பிரிவிற்கு பின் இருக்கும் 4 காரணங்கள்

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு பாஜக கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்க 4 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர்: பாஜக ஆதரவு திடீர் வாபஸ்- முதல்வர் அதிரடி ராஜினாமா- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு பாஜக கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்க 4 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. பிடிபி கட்சிக்கு பாஜக கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது.

    இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. அங்கு குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    காரணம் 1

    காரணம் 1

    இதற்கு முதல் காரணம் சில மாதங்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. காஷ்மீரில் கோவிலில் வைத்து சிறுமி, வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போதே இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது. அப்போது பாஜக இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கியதால், பிடிபி மென்மையாக கண்டித்து இருந்தது. இதனால் பாஜகவை சேர்ந்த காஷ்மீர் துணை முதல்வரும் மாற வேண்டிய சூழ்நிலை உருவானது.

    காரணம் 2

    காரணம் 2

    அதற்கு அடுத்தபடியாக காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகமானது. கடந்த மாதம் முழுக்க ரம்ஜான் என்பதால், காஷ்மீரில் தாக்குதல் நடத்த கூடாது என்று மத்திய அரசு முடிவெடுத்து இருந்தது. சரியாக ரம்ஜான் வரை இது முறையாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த நாட்களில் தீவிரவாதிகள் அதிக வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசு மீண்டும் தாக்குதல் நடத்த முடிவெடுத்தது. ஆனால் காஷ்மீர் பிடிபி அரசு அமைதி தொடர வேண்டும் என்று கூறியது.

    காரணம் 3

    காரணம் 3

    மூன்றாவதாக, காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 5 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். அதில் அவுரங்கசீப் என்ற ராணுவ வீரர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். பின் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் காஷ்மீரில் மேலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியது.

    காரணம் 4

    காரணம் 4

    கடைசியாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரியின் கொலை. இந்த கொலைக்கு பிடிபி கட்சி பெரிய எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதுவும் இரண்டு கட்சிக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்கி உள்ளது. சுஜாத்தை கல்புர்கி, கவுரி லங்கேஷ் போல இந்துத்துவா அமைப்புகள் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதால், பிடிபியின் கண்டனம் பாஜகவை கோபம் கொள்ள செய்துள்ளது.

    English summary
    Sources says that there are four major reasons behind the break in BJP-PDP alliance. Th alliance ends in Jammu & Kashmir, Amit Shah takes decision hours after meeting NSA Ajit Doval
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X