"கார் கதவை வைத்து தாக்குதல்".. என்னை தனியா விடுங்க.. வலிக்குது.. உருகிய மம்தா.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரசாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன..

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக மீண்டும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். தன்னுடைய அரசியல் பயணத்திற்கு அடித்தளமிட்ட அதே நந்திகிராம் தொகுதியில் மம்தா மீண்டும் போட்டியிட உள்ளார்.

இதற்காக அந்த தொகுதியில் மம்தா பானர்ஜி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இப்படி பிரசாரத்தின் போதுதான் மம்தா பானர்ஜி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

தாக்குதல்

தாக்குதல்

நேற்று பிருளியா பஜார் அருகே இருக்கும் கோவில் ஒன்றில் மம்தா பானர்ஜி வழிபாடு நடத்தி உள்ளார். கோவிலில் இருந்து வெளியே வந்தவர் தனது காருக்கு அருகே நின்று செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். மாலை 6.28 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. காரின் முன் கதவு திறந்து இருந்தது.

அருகே நின்றார்

அருகே நின்றார்

திறக்கப்பட்ட கதவுக்கு அருகே நின்று மம்தா பானர்ஜி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வேகமாக அவரை நோக்கி ஓடி வந்த நான்கு பேர் காரின் கதவை அடித்து சாத்தினார்கள்.இதனால் அங்கே நின்று கொண்டு இருந்த மம்தா பானர்ஜி அப்படியே கீழே விழுந்து காயம் அடைந்தார்.

கால்

கால்

இந்த தாக்குதலில் மம்தா பானர்ஜி காலில் அடிபட்டது. இதையடுத்து மம்தா பானர்ஜி உடனே மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். இவரின் காலில் கட்டு போடப்பட்டு, உதவியாளர்களின் உதவியோடு இவர் தூக்கி செல்லப்பட்டார். காரில் ஏறும்போதே மம்தா பானர்ஜி வலியில் துடித்தார்.

வலி

வலி

எனக்கு வலிக்கிறது.. என் கால் வீங்கிவிட்டது.. எனக்கு படபடப்பாக இருக்கிறது. என்னை கொஞ்சம் தனியாக விடுங்கள் என்று மம்தா பானர்ஜி மிகவும் உருக்கமாக குறிப்பிட்டபடி காரில் ஏறினார். இதையடுத்து எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு மம்தா பானர்ஜி அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காலில்

காலில்

இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடலில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை... இதுகுறித்து பேசிய மம்தா ... இது திட்டமிட்ட தாக்குதல். வேண்டுமென்றே என் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள். போலீஸ் அருகில் இல்லாததை பயன்படுத்தி, நான் கோவிலுக்கு சென்று வந்ததை பயன்படுத்தி என்னை தாக்கி உள்ளனர்.

நான்கு பேர்

நான்கு பேர்

கூட்டத்தில் இருந்து வெளியே வந்த நான்கு பேர் என்னை தாக்கி உள்ளனர், என்று மம்தா கூறியுள்ளார். ஆளும் முதல்வர் ஒருவரே இப்படி தாக்குதலுக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+