உத்தரகாண்டில் பெரும் சோகம்.. பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் திரிசூல மலைச் சிகரம் உள்ளது. இந்திய கடற்படையை சோந்த10 பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபடுவதற்காக கடந்த 3-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டது.

பனிச்சரிவு
இந்த குழுவினர் நேற்று திரிசூல மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் மயமானார்கள். இது குறித்து உடனடியாக இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் தெரிவிக்கிப்பட்டது.

4 பேர் பலி
மீட்பு குழுவினர் தீவிர மீப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் லெப்டினன்ட் சிடிஆர் ரஜினிகாந்த் யாதவ், லெப்டினன்ட் சிடிஆர் யோகேஷ் திவாரி, லெப்டினன்ட் சிடிஆர் அனந்த் குக்ரெட்டி, ஹரி ஓம் ஆவார்கள்.

ராஜ்நாத் சிங் இரங்கல்
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படை வீரர்கள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' இந்திய கடற்படை மலையேறும் பயணத்தில் மவுண்ட் திரிசூலுக்குச் சென்ற நான்கு கடற்படை வீரர்களின் துயர மரணத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் நாடு விலைமதிப்பற்ற இளம் உயிர்களை மட்டுமல்ல, தைரியமான வீரர்களையும் இழந்துள்ளது.

பிரார்த்திக்கிறேன்
லெப்டினன்ட் சிடிஆர் ரஜினிகாந்த் யாதவ், லெஃப்ட் சிடிஆர் யோகேஷ் திவாரி, லெஃப்ட் சிடிஆர் அனந்த் குக்ரெட்டி மற்றும் ஹரி ஓம் எம்சிபிஓ ஆகியோரின் குடும்பங்களுக்கு என் இதயம் செல்கிறது. இந்த துயரமான நேரத்தில் என் எண்ணங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. மாயமான வீரர்களை முன்கூட்டியே கண்டுபிடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று ராஜ்நாத் சிங் கூறியுளளார்.

பெரும் சோகம்
பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கடற்படை அதிகாரிகளுக்கு நெட்டின்ச்கள் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications