For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரண்டு நிற்கும் தென்னிந்தியா கட்சிகள்!

மத்திய அரசுக்கு எதிராக தென்னிந்திய மாநில கட்சிகள் ஒன்று கூடி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவை அசைத்துப் பார்க்கும் மாநிலக் கட்சிகள்...வீடியோ

    சென்னை: மத்திய அரசுக்கு எதிராக தென்னிந்திய மாநில கட்சிகள் ஒன்று கூடி இருக்கிறது. கூடுதலாக உ.பி, மேற்கு வங்க மாநில கட்சிகளும், இடதுசாரிகளும் இதில் கைகோர்த்து இருக்கின்றன.

    மத்திய அரசு எதிராக அழுத்தமான எதிர்ப்பு தென்னிந்தியாவில் போடப்பட்டு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பின் திராவிட நாடு கொள்கைக்கு இணையாக மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன.

    வேகமாக எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று அகண்ட பாரதத்தை கனவு கண்ட பாஜகவிற்கு தென்னிந்தியாவில் முதல் அடி விழுந்து உள்ளது. திங்கள் கிழமை நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின் அந்த அடியின் பலம் தெரியும்.

    அதிரடி தொடக்கம்

    அதிரடி தொடக்கம்

    மத்திய அரசை தெலுங்கு தேசம் கட்சி திடீரென எதிர்த்துள்ளது. முதலில் அமைச்சர்கள் பதவி விலகினார்கள். இப்போது மொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு விலகி இருக்கிறது தெலுங்குதேசம்.

    நம்பிக்கையில்லா தீர்மானம்

    நம்பிக்கையில்லா தீர்மானம்

    இந்த நிலையில்தான் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இன்று கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரப்போகும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது திங்களன்று வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.

    மோதும் கர்நாடகம்

    மோதும் கர்நாடகம்

    கர்நாடகாவில் பாஜக தனித்து விடப்பட்டு இருக்கிறது. நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் வீர சைவர்கள் என லிங்காயத்துகள் போர்க்கொடி தூக்கினர். பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த லிங்காயத்துகள் இப்போது ஆளும் காங்கிரஸ் ஆதரவு நிலையில் இருக்கின்றனர். லிங்காயத்துகளின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலையே காங்கிரஸ் அரசு கூறி வருகிறது. இதனால் பாஜக விழிபிதுங்கி நிற்கிறது.

    சிம்ம சொப்பனம்

    சிம்ம சொப்பனம்

    பாஜக நினைத்து கூட பார்க்க முடியாத இடமாக கேரள இருக்கிறது. திரிபுராவில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்த பாஜக கூட்டணி கேராளாவில் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் கண்டிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு எதிராக கேரள எம்பிக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    தமிழகம்

    தமிழகம்

    தமிழகத்தில் ஆளும் கட்சியை தவிர மற்ற எல்லா கட்சிகளும் பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறது. அதே சமயம் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அதிமுக எம்பிக்களும் பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த ஒரு வாரமாக கொடுக்கும் பேட்டிகள் மத்திய அரசு மீதான அதிருப்தியின் வெளிப்பாடுகள்தான். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவிற்கு எதிராக அதிமுக வாக்களிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    காரணம்

    காரணம்

    மதவாத மோதல்கள், மாநில பாஜக கட்சி தலைவர்களின் மோசமான பேச்சு என்பதையும் தாண்டி இதற்கு பின் இன்னொரு காரணமும் இருக்கிறது. சந்திரபாபு நாயுடு கூறியது போல ''தென்னிந்தியாவின் வரிப்பணத்தில் வட இந்தியா வாழ்கிறது'' என்பதுதான் தென்னிந்திய அரசியல் கட்சிகளின் உக்கிரத்துக்கு காரணமாக இருக்கிறது. பட்ஜெட்டில் கூட தென்னிந்தியா கவனிக்கப்படவில்லை என்பதும் கண்கூடாக தெரிகிறது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது பாஜக என்பதுதான் பெரும் கேள்வி.

    English summary
    5 South Indian states join together to oppose BJP government. Already they seek for a no-confidence motion against Modi government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X