டாப் 10 ரியல் எஸ்டேட் நகரங்கள் பட்டியலில்… சென்னை உள்ளிட்ட 6 இந்திய நகரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் அதிகமுள்ளன. அதனால் அவற்றில் அதிகபட்சமான முதலீடுகள் குவிக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் அதிக முதலீடுகளை கட்டுமான நிறுவனங்கள் கொட்டுகின்றன.

இந்த நிலையில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக ரியல் எஸ்டேட் முதலீடுகளை ஈர்க்கும் 10 நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் 6 இடங்களைப் பிடித்து இந்திய நகரங்கள் சாதனைப் படைத்துள்ளன.

6 Indian cities in top 10 realty investment spots in Asia-Pacific

ஹைதராபாத், பெங்களூரு, புனே, மும்பை, டெல்லி மற்றும் சென்னை உட்பட 6 இந்திய நகரங்கள்தான் ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்கான முதல் 10 முதலீட்டு நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான ' குஷ்மன் அண்ட் வாக்பீல்டு', " உலக அளவிலான முதலீடுகள், இந்தியாவில், ரியல் எஸ்டேட் தொழிலில், குறிப்பாக பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் அதிகம் செய்யப்படுகின்றன. இந்த நகரங்களில் அதிகம் வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன. இவை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நகரங்களாக உள்ளன. இவை ஒருங்கிணைந்த நகரமாகவும் வளர்ந்து வருகின்றன." என்று குறிப்பிட்டுள்ளது.

குஷ்மன் அண்ட் வாக்பீல்டு நிறுவனத்தின் மூத்த இயக்குனர் சித்தார்த் கோயல் கூறுகையில், " ஆசிய பசிபிக் பிராந்தியம் உலக முதலீட்டாளர்களின் இலக்காக உள்ளது. கடந்த 2005 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில், இந்திய ரியல் எஸ்டேட் சந்தையை உலக முதலீட்டாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.

இந்தியா முதலீட்டாளர்களுக்கு சிறந்த வணிக சூழலையும், இணக்கமான பொருளாதார கொள்கையையும் உடையதாக இருப்பதால் அதை உலக முதலீட்டாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதன்மூலம் நாட்டின் ஜிடிபி உயருகிறது." என்று தெரிவித்துள்ளார்.

'அட்லஸ் சம்மரி 2017 ' அறிக்கையின்படி, ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அளவு நடப்பாண்டில் 611 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
6 Indian cities including Hyderabad, Bengaluru, Pune, Mumbai, Delhi and Chennai have found place in the top 10 emerging property investment destinations list for the Asia-Pacific Region.
Please Wait while comments are loading...