அதி விரைவாக... செய்திகளை மொபைலில் தரும் ஒரே ஆப்.. ஒன்இந்தியாவின் 60 செகண்ட்ஸ் நவ் ஆப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதி விரைவாக, செய்திகளை உங்களது மொபைலுக்குக் கொண்டு வந்து தரும் ஒரே ஆப், உங்கள் ஒன்இந்தியாவின் "60 செகண்ட்ஸ் நவ்" ஆப் மட்டுமே.

ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும்.. மிக மிக முக்கியம். இதைக் கருத்தில் கொண்டே, 60 விநாடிகளில் என்ற புதிய அப்ளிகேஷனை ஒன்இந்தியா உங்களுக்கு வழங்குகிறது.

60 Seconds now App

உள்ளூர் முதல் உலக நாடுகளில் நடக்கும் செய்திகளை ஏற்கனவே உடனுக்குடன் தன் இணையதளம் மூலமாக ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் அளித்து வருகிறது ஒன்இந்தியா.காம். இணையதளத்தில் வெளிவரும் இந்த அனைத்துச் செய்திகளை நம் ஸ்மார்ட் போன்கள் மூலமாக உடனடியாகத் தெரிந்துகொள்ளவும் சமீபத்தில் பலவிதமான ஆப்களை ஒன்இந்தியா.காம் அறிமுகம் செய்தது.

அந்த வரிசையில், செய்திகளை மிகவும் சுருக்கமாக நீங்கள் படித்துத் தெரிந்து பயன்பெறுவதற்காகவே தற்போது ஒரு புதிய ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. '60 செகண்ட்ஸ் நவ்' என்று அழைக்கப்படும் இந்தப் ஆப், உலக நடப்புக்களை ரத்தினச் சுருக்கமாக உங்களுக்குத் தருகிறது.

(60 செகண்ட் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)

இருந்த இடத்திலிருந்தே பல்வேறு விதமான செய்திகளையும் சுருக்கமான வார்த்தைகளில் உங்களிடம் கொட்டிக் குவிக்கிறது இந்த புதிய ஆப். ஆம். கவர்ச்சிகரமான தலைப்புடன் இந்த ஆப் மூலம் வரும் ஒவ்வொரு செய்தியும் 45 வார்த்தைகளுக்குள்ளேயே அமைந்துள்ளன. இதனால் ஒரு செய்தியை நீங்கள் ஒரு நிமிடத்திற்குள்ளாக உங்கள் ஸ்மார்ட் போன் மூலமாகவே நீங்கள் படித்துவிட முடியும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உங்களுக்குச் செய்திகளை வழங்கும் '60 செகண்ட்ஸ் நவ்', ஒவ்வொரு மணி நேரத்திற்கும் புதிய செய்திகளைப் பதிப்பித்து, தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.

எனவே, செய்திகள் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ள நீங்கள், அதற்காக நிறைய நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் மொபைலில் உள்ள '60 செகண்ட்ஸ் நவ்' ஆப்பைத் தட்டினால், புதிய செய்திகள் உங்களை வரவேற்கக் காத்திருக்கும். இணையதளத்தில் நீங்கள் விரும்பிப் படிக்கும் தமிழ் செய்தி ஊடகங்கள் வெளியிடும் பல முக்கியச் செய்திகளை '60 செகண்ட்ஸ் நவ்' ஆப்பிலேயே பெற முடியும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட செய்தியை விரிவாக நீங்கள் படிக்க ஆசைப்பட்டால், ஒவ்வொரு '60 செகண்ட்ஸ் நவ்' செய்திக்கும் கீழ் அதற்கென்று ஒரு 'லிங்க்'கைத் தட்டினால் போதும்; ஆப்க்குள் இருந்தவாறே அதை நீங்கள் முழுவதும் படித்துக் கொள்ளலாம்.

(60 செகண்ட் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த '60 செகண்ட்ஸ் நவ்' செய்திகளை வழங்கி வருகிறது. தமிழில் தமிழகம், இந்தியா, இலங்கை, உலகம், சினிமா, விளையாட்டு மற்றும் வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் செய்திகள் உங்களை வந்தடைகின்றன.

(60 செகண்ட் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)

உங்கள் தேவைக்கேற்ப உங்களுக்கு விருப்பமான செய்திகளை நீங்கள் பட்டியலிட்டுக் கொள்ளவும் '60 செகண்ட்ஸ் நவ்'வில் வசதி உள்ளது. உங்கள் விருப்ப செய்திகளை இந்தப் பட்டியலில் சேர்க்கவும் அழிக்கவும் உங்களால் முடியும். அதேபோல், எழுத்துருக்களையும் உங்களால் அதிகரிக்கவோ குறைக்கவோ இயலும். மேலும், செய்திகளுடன் வெளிவரும் படங்களைக் காண உங்களுக்கு விருப்பமில்லை என்றால், அதை நீங்கள் மறைத்துக் கொள்ளவும் இந்த ஆப்பில் வசதி உள்ளது. '60 செகண்ட்ஸ் நவ்'வில் நீங்கள் படித்து மகிழ்ந்த செய்திகளையும் படங்களையும் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூ்க வலைத்தளங்களிலும் நீங்கள் ஷேர் செய்ய முடியும், படித்து முடித்த கையோடு!

இங்கு இன்னொரு முக்கியமான விஷயம்.. 60 செகண்ட்ஸ் ஆப்தான் செய்திகளை மிக விரைவாக உங்களது மொபைலுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறத ஆப் என்பதாகும்.

(60 செகண்ட்ஸ் நௌ ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க...)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
60 Seconds now App, a wrap up of different news broadcast within 60 - 70 words in regional languages.
Please Wait while comments are loading...